வைரல்

நீங்கள் இறந்த பிறகு உங்கள் Google Account என்ன ஆகும் என்று தெரியுமா?.. அதை பாதுகாப்பது எப்படி?

நீங்கள் இறந்த பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்ட் என்ன நடக்கும், அதை நாம் எப்படிப் பாதுகாப்பாக வைப்பது பற்றி இங்கே பார்ப்போம்.

நீங்கள் இறந்த பிறகு உங்கள் Google Account என்ன ஆகும் என்று தெரியுமா?.. அதை பாதுகாப்பது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்றைய மனிதர்கள் வாழ்க்கை டிஜிட்டல் மயமாகிவிட்டது. நாம் அதிகம் கையால் பணத்தை எடுத்து செலவு செய்வதை விட Google Pay போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை APP-களையே பயன்படுத்துகிறோம்.

அதேபோல், நமது வாழ்வின் ஓர் அங்கமாகவும் கூகுள் மாறிவிட்டது. நாம் இணையத்தைப் பயன்படுத்துவது தொடங்கி நமது இமையில் மற்றும் ஆண்டராய்டு ஸ்மார்ட் ஃபோனில் sign in செய்வது அவரை அனைத்துமே கூகுள் சார்ந்தே உள்ளது. இதனால் நம்முடைய அனைத்து தகவலும் கூகுள் அக்கவுண்டில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் இறந்த பிறகு உங்கள் Google Account என்ன ஆகும் என்று தெரியுமா?.. அதை பாதுகாப்பது எப்படி?

மேலும் இது பாதுகாப்பாக இருப்பதாலும், நாம் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் என்பதால் நாம் இந்த கூகுள் அக்கவுண்டை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நாம் இறந்த பிறகு இந்த கூகுள் அக்கவுண்ட் என்ன ஆகும் என்று ஒருமுறையாவது நினைத்திருக்கிறோமா?

நாம் நினைக்கவில்லை என்றாலும் இதைக் கூகுள் நிறுவனம் நினைத்துள்ளது. இதனால் தான் நாம் இறந்த பிறகு அந்த அக்கவுண்டை உறவினர்கள் அல்லது நண்பர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் வசதியைக் கொடுத்துள்ளது. இது என்ன என்பதைப் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.

நீங்கள் இறந்த பிறகு உங்கள் Google Account என்ன ஆகும் என்று தெரியுமா?.. அதை பாதுகாப்பது எப்படி?

முதலில் நாம் My Google Accountஐ லாகின் செய்தவுடன் Data & Privacy என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்ற பிறகு More Options என்று ஒரு பக்கம் காட்டும். அதில் Make a Plane For Youre Digital Legacy என்று இருக்கும் பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.

பின்னர் Inactive Account Manage என்ற வந்தவுடன் அதில் காட்டும் ஸ்டார்ட்டை கிள்க் செய்து நாம் நமது அக்கவுண்டை எவ்வளவு மாதம் பயன்படுத்தாமல் இருந்தால் நமது தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பலாம் என்று காட்டும்.

நீங்கள் இறந்த பிறகு உங்கள் Google Account என்ன ஆகும் என்று தெரியுமா?.. அதை பாதுகாப்பது எப்படி?

அதில் 3 மாதம் முதல் 14 மாதம் வரை என்ற 4 பகுதிகள் இருக்கும். அதில் ஒன்றை நாம் தேர்வு செய்ய வேண்டும். பிறகு நமது தகவல் யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு அவர்களின் Gmail முகவரியைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு அவர்களுக்கு நம்முடைய தகவல்களில் எதை அனுப்பவேண்டும் என தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

நாம் தேர்வு செய்த மாதங்களை கடத்து குகூள் அக்கவுண்டை செயல்படாமல் இருந்தால், அதன் பிறகு நமது தகவல்கள் அனைத்தும் யாருக்கு நாம் தேர்வு செய்திருந்தோமா அவர்களுக்கு மாற்றம் செய்யப்படும். இதை அவர்கள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories