உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுபுதுக் கார்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏன்! எலான் மஸ்க் கூட மின்சார கார்களை அறிமுகம் செய்து கார்கள் யுகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல் முன்னணி நிறுவனங்களும் மின்சார கார்களை தயாரித்து அறிமுகம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் 2023ம் ஆண்டு Volkswagen நிறுவனம் தனது sixth-generation Polo காரை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் இந்திய சந்தையில் fifth-generation காரை மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது.
உலக ஆட்டோ மொபைல் சந்தையில் Volkswagen நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இருந்து வருகிறது. இதுவரை 6 generation Polo கார்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில் fifth-generation Polo கார் இந்தி சந்தையில் 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து கொஞ்சம் மேம்படுத்தப்பட்டு 2013ம் ஆண்டு தனது sixth-generation Polo காரை உலக சந்தையில் அறிமுகம் செய்தது. ஆனால் இந்த கார் இந்தியச் சந்தையில் இன்னும் அறிமுகமாகவில்லை.
இந்த sixth-generation Polo கார் ஸ்டைலிங் மாற்றங்களில் ஹெட்லைட்களை இணைக்கும் புதிய LED லைட் ஸ்ட்ரிப், புதிய LED ஹெட்லைட்கள், புதிய முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 1.0-லிட்டர், மூன்று சிலிண்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் ஆகிய இரண்டும் வடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேலும் கியர்பாக்ஸ் விருப்பங்களில் இயந்திரம் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் உள்ளிட்ட பல வசதிகள் இந்த காரில் உள்ளது.
இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தால் ஆரம்ப விலையே ரூ.10 லட்சத்திற்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Taxes அதிகமாக இருப்பதாலேயே இந்திய சந்தையில் Sixth Generation Polo காரை Volkswagen நிறுவனம் இன்னும் அறிமுகம் செய்யாமல் உள்ளது. இருப்பினும் 2023ம் ஆண்டு இந்திய சந்தையில் இந்த Polo காரை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.