வைரல்

"இனி நான் திருமணமே செய்ய மாட்டேன்.." -காதலியின் சடலத்துக்கு தாலி கட்டிய காதலன் உறுதிமொழி: அசாமில் விநோதம்

காதலி உயிரிழந்ததால், இனி தான் வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என கூறி உயிரிழந்த காதலிக்கு தாலி கட்டிய காதலனின் செயல் அசாமில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இனி நான் திருமணமே செய்ய மாட்டேன்.." -காதலியின் சடலத்துக்கு தாலி கட்டிய காதலன் உறுதிமொழி: அசாமில் விநோதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காதலி உயிரிழந்ததால், இனி தான் வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என கூறி உயிரிழந்த காதலிக்கு தாலி கட்டிய காதலனின் செயல் அசாமில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாதியில் என்ற பகுதியை சேர்ந்தவர் பிதுபன் தமுளி. 27 வயதுடைய இளைஞரான இவரும், பிராத்தனா போரா என்ற இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, அவர்களும் தங்கள் பிள்ளைகள் ஆசைக்கு தடையாக இருக்க விரும்பாமல், சம்மதம் தெரிவித்தனர்.

"இனி நான் திருமணமே செய்ய மாட்டேன்.." -காதலியின் சடலத்துக்கு தாலி கட்டிய காதலன் உறுதிமொழி: அசாமில் விநோதம்

எனவே இவர்கள் இருவீட்டார் சம்மத்துடன் திருமணம் செய்ய எண்ணியுள்ளனர். அதன்படி இவர்கள் திருமணத்திற்கான ஏற்படுகள் செய்துகொண்டிருந்தனர். இதனிடையே இளம்பெண் பிராத்தனாவுக்கு சில நாட்களாக உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் கௌகாதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்று திடீரென உயிரிழந்தார். இவர் உயிரிழந்ததை தாங்க முடியாத உறவினர்கள், காதலன் கண்ணீர் விட்டு கதறி அழுத்துள்ளனர்.

"இனி நான் திருமணமே செய்ய மாட்டேன்.." -காதலியின் சடலத்துக்கு தாலி கட்டிய காதலன் உறுதிமொழி: அசாமில் விநோதம்

இதையடுத்து அவரது உடல் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக கொண்டு வரப்பட்டது. இங்கே அவருக்கு இறுதி சடங்கு நடக்கும்போது திடீரென பிதுபன் வெளியில் சென்றுள்ளார். காதலி உடலை காண முடியாமல் வெளியில் பிதுபன் அமர்ந்திருப்பதாக எண்ணிய உறவினர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தனது கையில் மாலை, குங்குமம், தாலி உள்ளிட்டவையை எடுத்து வந்தார்.

பின்னர் தான் பிரார்த்தனாவை திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். பிதுபன் பேச்சுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில், இறுதி சடங்கிற்கு வைக்கப்பட்ட காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் காதலன், தனது இறந்து போன காதலியின் நெற்றியிலும், இரு கன்னங்களிலும் குங்குமத்தை வைக்கிறார். பின்னர் தான் கொண்டு வந்த மாலையை அவருக்கு அணிவித்து, அவரது கைபட்டு மற்றொரு மாலையை தான் அணிந்து கொள்கிறார். இதையடுத்து அவர் முன்பு, இனி தான் திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்று உறுதிமொழி எடுக்கிறார்.

"இனி நான் திருமணமே செய்ய மாட்டேன்.." -காதலியின் சடலத்துக்கு தாலி கட்டிய காதலன் உறுதிமொழி: அசாமில் விநோதம்

இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து அவர்களது குடும்பத்தினர் கூறுகையில், "பிரார்த்தனாவின் ஆசையே பிதுபனை திருமணம் செய்து வாழ வேண்டும் என்பது தான். பல கனவுகளோடு இருந்தார். ஆனால் அவருக்கு இப்படி ஒரு நிலைமை. இவர்கள் காதலுக்கு நாங்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரார்த்தனாவை பிதுபன் இவ்வளவு ஆழமாக காதலிப்பார் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை" என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories