வைரல்

மகாராஷ்டிராவில் ஓடும் ஆட்டோவில் குதித்த சிறுமி.. வெளியான CCTV காட்சியால் பரபரப்பு.. காரணம் என்ன ? | VIDEO

ஆட்டோ ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி ஒருவர் குதிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஓடும் ஆட்டோவில் குதித்த சிறுமி.. வெளியான CCTV காட்சியால் பரபரப்பு.. காரணம் என்ன ? | VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆட்டோ ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி ஒருவர் குதிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத் பகுதியில் உள்ளது உஸ்மான்புரா என்ற இடம். இங்கு இருக்கும் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சிறுமி வெளியில் இருந்து தனது வீட்டிற்கு செல்ல ஆட்டோவை அழைத்துள்ளார். அப்போது ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநர் சிறுமியிடம் எங்கே செல்ல வேண்டுமென கேட்க, அவரோ தான் செல்ல வேண்டிய இடத்தை கூறினார்.

மகாராஷ்டிராவில் ஓடும் ஆட்டோவில் குதித்த சிறுமி.. வெளியான CCTV காட்சியால் பரபரப்பு.. காரணம் என்ன ? | VIDEO

பின்னர் ஆட்டோவில் ஏறி அமர்ந்த சிறுமியிடம் ஓட்டுநர் பேச்சு கொடுத்து வந்துள்ளார். சிறுமியும் பதிலுக்கு நன்றாக பேசி வந்த நிலையில், ஓட்டுநரின் பேச்சில் மாற்றங்கள் இருந்ததை சிறுமி கண்டுபிடித்துள்ளார். எனவே ஓட்டுநருடன் பேச்சை நிறுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து தொடர்ந்து பேச்சு கொடுத்து வந்த ஓட்டுநர் சிறுமியிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால் ஆட்டோவை சிறுமி நிறுத்தக்கூறியுள்ளார். எனினும் நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றுள்ளார். மேலும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் வேறு வழியின்றி சிறுமி சில்லி கானா என்ற பகுதியில் ஓடி கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து சாலையில் குதித்துள்ளார். அந்த சாலையில் பெரிதாக வாகனங்கள் அடிக்கடி செல்லாததால் சிறுமி மீது எந்த வாகனமும் மோதவில்லை.

இருப்பினும் சிறுமி கீழே குதித்த போது பின்னால் ஒரு காரும், ஓரமாக ஒரு பைக்கும் வந்துள்ளது. அவர்கள் சிறுமியை கண்டதும் அவரை மீட்டு உடனே மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து சிறுமி குதிக்கும் காட்சி அதில் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில் ஓடும் ஆட்டோவில் குதித்த சிறுமி.. வெளியான CCTV காட்சியால் பரபரப்பு.. காரணம் என்ன ? | VIDEO

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியிடம் காவல்துறையினர் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளியான ஆட்டோ ஓட்டுநர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories