வைரல்

250 பெண்களை வரன் பார்க்க திரண்ட சுமார் 14 ஆயிரம் இளைஞர்கள்.. என்னடா இது 90ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனை !

250 பெண்களை வரன் பார்க்க 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

250 பெண்களை வரன் பார்க்க திரண்ட சுமார் 14 ஆயிரம் இளைஞர்கள்.. என்னடா இது 90ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாட்டில் திருமணம் முடியாத இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் சில கிராமபுறங்களில் மணப்பெண் கிடைக்காத நிலையும் அதிகரித்து வருகிறது. இதனை வைத்து வியாபாரம் செய்ய பல மேட்ரிமோனி தளங்களும் செயல்பட்டு வருகிறது.

பல இடங்களில் திருமண வரன் பார்க்கும் நிகழ்வுகளில் ஆண்கள் கூட்டம் அலைமோதுவதை தொடர்ந்து பார்த்து வந்துள்ளோம். அப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடந்துள்ளது. மாண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுகா ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்வு நடந்துள்ளது.

250 பெண்களை வரன் பார்க்க திரண்ட சுமார் 14 ஆயிரம் இளைஞர்கள்.. என்னடா இது 90ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனை !

'ஒக்கலிகா மணமக்கள் மாநாடு' என்ற பெயரில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த திருமண வரன் நிகழ்ச்சியில் பங்குபெற சுமார் 14,000 பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அதில் பதிவு செய்த பெண்களின் எண்ணிக்கை வெறும் 250தான்.

ஆனால், அதிசயதக்க விதமாக 13,750 இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் இருந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படி 250 பெண்களை வரன் பார்க்க ஏராளமான இளைஞர்கள் அந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர். இது தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories