வைரல்

கார் மற்றும் பைக் பரிசு.. ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த பிரபல ஜூவல்லர்ஸ் நிறுவனம்!

சலானி ஜூவல்லர்ஸ் நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளது.

கார் மற்றும் பைக் பரிசு..  ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த பிரபல ஜூவல்லர்ஸ் நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் தீபஒளி திருநாள் பண்டிகையையொட்டி பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் தீபஒளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைவரும் குடும்பத்துடன் புது ஆடைகளை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சலானி ஜூல்லர்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கார் மற்றும் பைக் பரிசு..  ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த பிரபல ஜூவல்லர்ஸ் நிறுவனம்!

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு பெரிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது சலானி ஜூவல்லர்ஸ். இந்நிறுவனம் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. மேலும் தங்களது ஊழியர்களுக்கும் அனைத்து விதமான உதவிகளைச் செய்து வருகிறது.

இந்நிலையில் சலானி ஜூவல்லர்ஸ் 10வது ஆண்டை நோக்கிப் பயணிக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது ஊழியர்களை உற்சாகப் படுத்தும் நோக்கில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது.

கார் மற்றும் பைக் பரிசு..  ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த பிரபல ஜூவல்லர்ஸ் நிறுவனம்!

அதன்படி சென்னையில் சலானி ஜூவல்லர் நிறுவனம் தனது ஊழியர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியது. அப்போது 8 ஊழியர்களுக்கு மாருதி சுசூகி சுவிப்டர் காரை பரிசாக வழங்கியது. மேலும் 18 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதில் 10 பெண் ஊழியர்களுக்கு தலா ஒரு ஹோண்டா ஆக்டிவா, 9 ஆண் ஊழியர்களுக்கு ஹோண்டா ஷைன் வாகனங்கள் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

இது குறித்துப் பேசிய சலானி ஜூவல்லரி மேலாண் இயக்குநர் ஜெயந்திலால் சலானி, "தங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் ஊழியர்களின் திறமை மற்றும் உழைப்பை அங்கீகரித்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories