வைரல்

“கல்லூரி விடுதியில் மாயமான கர்நாடக மாணவிகள் - சென்னையில் பத்திரமாக மீட்பு” - நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலைய சாலையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் இருந்து காணாமல் போன பி.யூ.சி கல்லூரி மாணவிகள் 3 பேர் சென்னையில் செப்டம்பர் 23ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டனர்.

“கல்லூரி விடுதியில் மாயமான கர்நாடக மாணவிகள் -  சென்னையில் பத்திரமாக மீட்பு” - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலைய சாலையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் இருந்து காணாமல் போன பி.யூ.சி கல்லூரி மாணவிகள் 3 பேர் சென்னையில் செப்டம்பர் 23ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டனர்.

இது குறித்து மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர போலிஸ் கமிஷனர் சசிகுமார் அளித்த பேட்டியில், கர்நாடகத்தின் சித்ரதுர்காவைச் சேர்ந்த ஒரு மாணவியும் பெங்களூரைச் சேர்ந்த இரண்டு மாணவிகளும் கடந்த செப்டம்பர் 21 அன்று தங்களுடைய விடுதியில் இருந்து காணாமல் போனார்கள். தப்பிசெல்வது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. மேலும் மூவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாயமான மூன்று மாணவிகளும் சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று ஏமாற்றம் அடைந்ததால் மங்களூர் சென்ட்ரல் வந்து ரயிலில் பயணம் செய்தனர். தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவியர்கள் மூவரும் கலந்து ஆலோசித்து விடுதியை விட்டு வெளியேற முடிவு செய்தனர். சென்னையில் உள்ள உறவினர் வீடு ஒன்றுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி, சென்னைக்கு சென்ற அவர்கள் மனம் மாறி, அங்குள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு சென்று தங்கள் விவரங்களை கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள போலிஸ் அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் பெற்றோர் உடனடியாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, மாணவிகளை தமிழக போலிஸார் மாணவிகளை பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் மங்களூர் மாநகர போலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது இனைறைய தினம் மங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories