இந்தியா

மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை.. கர்நாடக அரசுப்பள்ளியில் நடந்த கொடூரம் !

40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரசுப் பள்ளி ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை.. கர்நாடக அரசுப்பள்ளியில் நடந்த கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் பகுதியை அடுத்துள்ள சிங்கபுரா என்ற கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் முகமது அசாருதீன். இவர் பாடம் சொல்லி கொடுப்பதாக கூறி பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வதாக புகார்கள் எழுந்தது.

அதுமட்டுமின்றி அவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியைகளிடமும் தனது லீலைகளை காட்டி வந்துள்ளார். மேலும் இவரும் பெண் ஆசிரியை ஒருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை.. கர்நாடக அரசுப்பள்ளியில் நடந்த கொடூரம் !

இதையடுத்து முகமது அசாருதீன் தலைமைறைவாகி விட்டார். பின்னரே தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாணவ -மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.

எனவே ஆசிரியர் முகமது அசாருதீனைபணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை போலீசார் கைது செய்து உரிய விசாரணை நடத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆசிரியர் முகமது அசாருதீனை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை போலிஸார் கைது செய்து உரிய விசாரணை நடத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை.. கர்நாடக அரசுப்பள்ளியில் நடந்த கொடூரம் !

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமது அசாருதீனை வலைவீசி தேடி வருகின்றனர்.

அதோடு காவல்துறை நடத்திய விசாரணையில் அவர், மாணவிகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், பலரை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories