வைரல்

ஏன் என்னிடம் பணம் இல்லை?.. வாழ்வில் நிம்மதி இல்லை?: இப்படி பல கேள்விகளுக்கு பதில்தான் என்ன?

முதலாளித்துவமும் அரசுகளும் காலாவதி ஆகும் சூழலை கண்டு கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு தேவை ஒரு மிகப்பெரிய மக்கள் தொகை அழிப்பு.

ஏன் என்னிடம் பணம் இல்லை?.. வாழ்வில் நிம்மதி இல்லை?: இப்படி பல கேள்விகளுக்கு பதில்தான் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். நேற்று கூட ஒரு தோழர் என்னிடம் கேட்டார், ‘பொருள்முதல்வாதம் பேசும் கம்யூனிசம் மன உணர்வுகளை என்னவாக புரிந்துகொள்கிறது?’ என. எத்தனை விளக்கம் கொடுத்தப்பின்னும் பொருளை சார்ந்தே உணர்வுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை புரிந்துகொள்வது மிக கடினமாக இருந்தது தோழருக்கு. ஏனெனில் இன்றைய சமூகத்தின் social conditioning அப்படி உள்ளது.

தனி நபர் உணர்வை முதன்மைப்படுத்தி, அதில் லாபங்களை அறுவடை செய்து கொண்டிருக்கும் முதலாளித்துவம், தனி நபர் உணர்வுகள் ரணமாக்கப்படும்போது என்ன நிகழும் என்பதை யோசிப்பதில்லை. அது முதலாளித்துவத்தின் வேலையும் அல்ல. எதற்குமே பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் தன்னை வளர்த்தெடுக்க மட்டுமே அதற்கு தெரியும். ஆனால் இப்படி தனி நபர் உணர்வுகளை முதன்மையாக கருதும் சூழலில் பிறந்து வளர்ந்து, கம்யூனிசமும் அண்டாமல் வாழும் மனங்களில் எழும் கேள்விகளுக்கு என்ன பதில்கள்?

ஏன் என்னிடம் பணம் இல்லை?.. வாழ்வில் நிம்மதி இல்லை?: இப்படி பல கேள்விகளுக்கு பதில்தான் என்ன?

‘ஏன் என்னிடம் பணம் இல்லை?’

‘ஏன் என் வாழ்வில் நிம்மதி இல்லை?’

‘ஏன் இத்தனை தனிமையில் உழலுகிறேன்?’

‘என்னை புரிந்துகொள்ளவென ஒரு உயிர் கூட இவ்வுலகில் கிடையாதா?’

‘ஏன் என் நோய்க்கான மருந்துகளை வாங்குமளவுக்கான வருமானம் எனக்கு இல்லை?’

என பல கேள்விகள். யார் பதில் கொடுப்பார்?

யாரும் கிடையாது. நம் அரசுகளும் பணக்காரனுக்கு மட்டுமே வாய்ப்புகளை பெருக்குவதை நிர்வாகம் என செய்து கொண்டிருக்கையில் மனித குலத்தின் பெரும்பகுதியின் குரல்கள் கேட்கப்படுவதே இல்லை. உலகின் அந்த பகுதியில் இருந்து வரும் ஒருவன், தனக்குள் எழும் கேள்விகளுக்கு சித்தாந்த புரிதல்களற்று, பதில் சொல்லத் தொடங்குகையில் சமூகத்தின் ஆகப்பெரும் ஜோக்கர் ஆகிறான்.

இன்று சுற்றி பாருங்கள். உங்களுக்கு அருகே நேர்ந்த தற்கொலைகளை பற்றி விசாரித்து பாருங்கள். இந்த வசனம் அச்சம்பவங்களுக்கு பின் நிச்சயம் இருக்கும்.

ஏன் என்னிடம் பணம் இல்லை?.. வாழ்வில் நிம்மதி இல்லை?: இப்படி பல கேள்விகளுக்கு பதில்தான் என்ன?

நம் சக மனிதர்களிடம் இருந்து பிரித்து நம்மை ஓட வைப்பது எது? நம் சக மனிதனை நமக்கு எதிரியாக மாற்றுவது எது? கூட்டு வாழ்வில் பரிணாமம் கொண்ட நம்மை நம் இயல்புக்கு மீறி தனியாக ஆக்குவது எது?

எல்லா கேள்விகளும் ஒன்று திரளும் காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவமும் அரசுகளும் காலாவதி ஆகும் சூழலை கண்டு கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு தேவை ஒரு மிகப்பெரிய மக்கள் தொகை அழிப்பு. அவற்றுக்கு வழி கோலும் வகையிலான படங்களை ஜோக்கர் போலவும் தானோஸ் போலவும் கொடுத்து நம் சிந்தனையை தூண்டலாம். ஆனால் அவற்றுக்குள்ளும் புகுந்து சித்தாந்தம் தேடுபவர்களே சமூகத்தின் இன்றைய அத்தியாவசியத் தேவை.

banner

Related Stories

Related Stories