
தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ஷய் ராஜ் (வயது 17). இவர் தனது நண்பர்கள் இருவருடன் இன்ஸ்டாகிராம் ரீலுக்கான வீடியோ எடுக்க முடிவுசெய்துள்ளார். வித்தகராக காசிபேட் ரயில் நிலையம் அருகே உள்ள வாடேபல்லி டேங்கில் உள்ள தண்டவாளத்தை அவர் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி ரயிலுக்கு அருகில் செல்வதுபோல வீடியோ பதிவுசெய்ய முடிவுசெய்த அவர் ரயில் வரும்போது தண்டவாளத்தின் அருகில் நடந்துசென்றுள்ளார். இதனை அவரின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அப்போது வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் சென்ற அக்ஷய் ராஜ்ஜின் இடதுதோளில் வேகமாக மோதியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட அக்ஷய் ராஜ் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே போலீசார் அக்ஷய் ராஜை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பயங்கர விபத்தில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். போலிஸார் விசாரணையில் நண்பர்களின் எச்சரிக்கையை மீறி அவர் தண்டவாளத்தின் அருகில் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான cctv காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








