வைரல்

"இரண்டே வரியில் மோடி அரசை விமர்சித்த பி.சி.ஸ்ரீராம்"... இணையத்தில் வைரலாகும் ட்வீட்!

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"இரண்டே வரியில் மோடி அரசை விமர்சித்த பி.சி.ஸ்ரீராம்"... இணையத்தில் வைரலாகும் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் இன்று 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

முன்னதாக ஆகஸ்ட் 13ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் சமூகவலைதளங்களில் தங்களின் DP-யில் தேசியக் கொடியை வைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து சினிமா நட்சத்திரங்கள் முதல் பொதுமக்கள் வரை தேசியக் கொடியை தங்களில் வீடுகளில் ஏற்றி நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டர் பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த பதிவிற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். பி.சி.ஸ்ரீராம் ட்விட்டர் பதிவில், "நான் இந்தியாவை நேசிக்கிறேன். ஆனால் அரசை அல்ல" என தெரிவித்துள்ளார்.

"இரண்டே வரியில் மோடி அரசை விமர்சித்த பி.சி.ஸ்ரீராம்"... இணையத்தில் வைரலாகும் ட்வீட்!

இந்த பதிவு மூலம் ஒன்றிய அரசை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தொடர்ச்சியாக இந்திய நாட்டிற்கே பா.ஜ.க அரசு அச்சுறுத்தலாக இருந்து விருகிறது என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 'உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என பா.ஜ.க ஆதரவாளர்கள் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories