வைரல்

10 மாதத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை.. இந்தியச் சந்தையில் சாதனை படைத்த Tata Punch!

இந்தியாவில் டாடா நிறுவனத்தின் Pinch கார் விற்பனை தொடங்கிய 10 மாதங்களிலேயே 1 லட்சம் கார் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

10 மாதத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை.. இந்தியச் சந்தையில் சாதனை படைத்த Tata Punch!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப முன்னணி நிறுவனங்களான டாடா, மஹிந்திரா, மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் புது கார்களை அறிமுகம் செய்துள்ளன. மேலும் மாருதி சுசூகி இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் பிரீஸா காரை அறிமுகம் செய்துள்ளது.

இப்படி முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு மேம்பட்ட வசதிகளுடன் புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு டாடா நிறுவனம் Pinch காரை அறிமுகம் செய்தது.

இந்த டாடா Pinch கார் pure, Adventure Persona, Accomplished,Creative ஆகிய 4 வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனையாகிறது. இந்த டாடா Pinch ரூ.5.65 லட்சத்திலிருந்து விலை தொடங்குகிறது.

10 மாதத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை.. இந்தியச் சந்தையில் சாதனை படைத்த Tata Punch!

இந்நிலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட அக்டோபர் மாத்திலிருந்து கடந்த 10 மாதங்களில் 1 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இவ்வளவு விரைவாக இதுவரை எந்த காரும் அதிகமாக விற்பனையானது இல்லை.

இது குறித்து டாடா நிறுவனம், 'இந்த சாதனைக்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களின் அதீத நம்பிக்கையே ஆகும்' என தெரிவித்துள்ளது. மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories