வைரல்

பெண்ணியவாதிகள் இரண்டு வகை: என்ன காரணம்? எதனால்?

கலவி, காதல், பெண் விடுதலை என பூச்சுகளை கொண்டு, ஓஷோ சிந்தனைகளும் பெண்ணியமும் சில பல சமூக லாபிகளுக்கு பயன்படும் நிலைக்கே தள்ளப் பட்டிருக்கின்றன.

பெண்ணியவாதிகள் இரண்டு வகை: என்ன காரணம்? எதனால்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

90களுக்கு முந்தைய பெண்ணியவாதிகள் ஒரு தரப்பு. 90களுக்கு பின்னான பெண்ணியவாதிகள் மறுதரப்பு.

90களுக்கு முந்தைய பெண்ணியவாதிகள் பேசும் பெண்ணியம், பெண்களுக்கான ஒட்டுமொத்த சமூக விடுதலையாக இருக்கும். அவர்களின் பாரம்பரியம் பெரும்பாலும் பெரியாரிய, கம்யூனிச இயக்கங்களாக இருக்கும்.

90களுக்கு பின்னான பெண்ணியவாதிகள் பேசும் பெண்ணியம் பெரும்பாலும் ஆண்-பெண் உறவை பற்றி மட்டுமானதாக இருக்கும். அந்த அளவுக்கு பெண்ணியம் என்கிற யானை சுருக்கப்பட்டிருக்கும். அவர்கள் சமூகத்தின் உற்பத்தி உறவுகள், பெண்கள் மீதான சமூக மற்றும் அதிகார மையங்களின் ஒடுக்குமுறை ஆகியவற்றை எல்லாம் பேச மாட்டார்கள்.

பெண்ணியவாதிகள் இரண்டு வகை: என்ன காரணம்? எதனால்?

சமூக நிலையில் எல்லா நிலைகளிலும் படிமங்களிலும் நிறைந்திருக்கும் ஆண் அதிகார சிந்தை புரியவே புரியாது. ஏனெனில் 90களுக்கு பின்னான பெண்ணியவாதிகளின் நோக்கம் பெண்களுக்கான சமூக ரீதியிலான விடுதலை அல்ல. அதென்ன 90களை வரையறையாக வைத்து பிரிக்கிறீர்கள் என கேட்கலாம்.

90களில் உருவான சமூகம், தாராளமயமாக்கலில் விளைந்த சமூகம். தாராளமயமாக்கல் கொண்டு வந்தது கார்ப்பரெட் மூலதனத்தை. அந்த மூலதனத்துக்கு உறவுகள் மேலும் மேலும் உடைந்து மக்கள் தனியர்களாக இருப்பதுதான் அதிக லாபத்தை கொடுக்கும். அது version 2.0 பெண்ணியவாதிகளின் தேவையைப் புரிந்து கொள்கிறது. அந்த தேவை பூர்த்தியாகும் களத்தை வழங்குகிறது.

உலக பொருளாதாரத்தின் வாழ்வியல் சிந்தனை திரிபுகளை பெரும்பாலும் எவரும் புரிந்து கொள்வதில்லை. ஆனால், பன்னாட்டு மூலதனம், தன் லாபத்துக்காக அனைவரையும் பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. அது கொடுக்கும் வெளி தனக்கு சாதகமாக இருப்பதால், ஆண் தன் லாபத்துக்கு அதை பயன்படுத்திக் கொள்கிறான். அவன் பேச்சால் எது பாதிக்கிறது, என்ன சமூக விளைவு ஏற்படுத்தப்படுகிறது என எதுவும் தெரியாமல் பெண்ணும் நம்புகிறாள்.

பெண்ணியவாதிகள் இரண்டு வகை: என்ன காரணம்? எதனால்?

பெண்ணை ஒரு 'தனி முழுமை'யாக பார்க்கும் பார்வை. அதில் எந்த பாசாங்கும் இருக்காது. சுலபமாக சொல்வதெனில் ஓஷோவை படித்தவர்களிடம் முக்கியமான தெளிவு ஒன்று இருக்கும். அது உறவு என்பதில் உள்ள சிக்கல்களை முழுமையாக புரிந்துகொள்ளும் தெளிவு. அச்சிக்கல்களை அனுமதிக்கும் அத்தெளிவு அனுமதிக்கும். அது எப்போதும் உறவை கொண்டாடாது. ஆனால் அத்தெளிவு சம்பந்தப்பட்ட உறவில் இருக்கும் இருவரிடம் இருத்தல் வேண்டும். இல்லையென்றால் Greek Tragedyதான்.

உறவின் தேவை, மனிதனின் தனிமை போன்ற தத்துவ மற்றும் ஆன்ம தேடலை அத்தெளிவு கொண்டிருக்கும்.

காதல் மற்றும் கலவிக்கான உத்தியாக ஓஷோவை அது எக்காலத்திலும் பயன்படுத்தாது. நிலவின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து கவி பாடும் முட்டாள் கவிஞனை போல், தன் தேவைக்காக ஓஷோவை, பெண்ணியத்தை திரிப்பதும் அதன் முழுமையை கொள்ள மறுப்பதும்தான் இங்கு நடக்கும் உலக மூலதன அரசியல். விளைவாக, ஓஷோ பேசிய யாவும் இங்கு யானையை தடவிய குருடர்களின் சிந்தனை போல்தான் புரிந்துகொள்ள படுகிறது.

கலவி, காதல், பெண் விடுதலை என பூச்சுகளை கொண்டு, ஓஷோ சிந்தனைகளும் பெண்ணியமும் சில பல சமூக லாபிகளுக்கு பயன்படும் நிலைக்கே தள்ளப் பட்டிருக்கின்றன. இலக்கியம், உறவு என எல்லா நிலைகளிலும் அவை தலைகுப்புற நிறுத்தப்படுகின்றன

banner

Related Stories

Related Stories