வைரல்

“ஆதி தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? - குமரிக் கண்டம் உண்மையா ?” : சிறப்புக் கட்டுரை!

பெருமையை மட்டும் பிடித்துக் கொண்டு அறிவியலை கைவிடுகையில் அது கட்டுக்கதையாகவும் அதீத நம்பிக்கையாக மட்டுமே மாற்றப்படும். 'ஜெய் ஸ்ரீ ராம்' போல்!

“ஆதி தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? - குமரிக் கண்டம் உண்மையா ?” : சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஏன் அறிவியல் முக்கியம்?

பொதுவாக ஆதி தமிழர்கள் பற்றி இருவேறு கருதுகோள்கள் உண்டு. ஒன்று, வடக்கிலிருந்து தெற்கு வந்தவர்கள் என்கிற கருதுகோள். இன்னொன்று தெற்கிலிருந்து எல்லா இடங்களுக்கும் பரவியதாக ஒரு கருதுகோள்.

முதல் கருதுகோளின்படி, ஆப்பிரிக்காவிலிருந்து கிட்டத்தட்ட 60000 வருடங்களுக்கு முன் வெளியேறியவர்கள் கடற்கரையை பிடித்து இந்தியா, ஆசியா என பயணித்து ஆஸ்திரேலியா சென்று ஆசியா, ஈரான் எல்லாம் சுற்றி ஒரு பகுதி கிமு 8000-த்தில் பாகிஸ்தானுக்கு அருகே இருக்கும் பலுச்சிஸ்தானத்துக்கு வந்து நாளடைவில் தெற்கு பக்கமாக நகர்ந்தனர் என்கிறது.

“ஆதி தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? - குமரிக் கண்டம் உண்மையா ?” : சிறப்புக் கட்டுரை!

இரண்டாம் கருதுகோளின்படி ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தொடங்கி ஆஸ்திரேலியா வரை நிலமாக இருந்ததாகவும் ஆப்பிரிக்க மனிதர்கள் ஆஸ்திரேலியாவை அடைய அந்த நிலமே வழியாக இருந்ததாகவும் காலப்போக்கில் அப்பகுதி கடலுக்குள் மூழ்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்த நிலப்பகுதியையே குமரிக் கண்டம் எனவும் லெமூரியா கண்டம் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

எனக்கும் தமிழ் பிடிக்கும். அதன் இலக்கியம், இலக்கணம், தொன்மை, வாழ்வியல் என பலவும் பெருமைக்குரிய விஷயங்கள்தான். எனினும் பெருமையை மட்டும் பிடித்துக் கொண்டு அறிவியலை கைவிடுகையில் அது கட்டுக்கதையாகவும் அதீத நம்பிக்கையாக மட்டுமே மாற்றப்படும். 'ஜெய் ஸ்ரீ ராம்' போல்!

“ஆதி தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? - குமரிக் கண்டம் உண்மையா ?” : சிறப்புக் கட்டுரை!

மடகாஸ்கரிலிருந்து ஆஸ்திரேலியா வரை நீளும் sea shelf எதுவும் இல்லை. பூம்புகார், மகாபலிபுரம் போல் ஆங்காங்கே கடலேறி வந்ததால் மூழ்கிய கடலோர பகுதிகளும் அவற்றின் கட்டுமானங்களும் இருக்கின்றன. நில அடுக்கு தட்டு (tectonic plate) ஒன்றாக இருப்பதை வைத்து ஓர் ஊகம் சொல்லப்படுகிறது. அதை ஆராயலாம்.

பழைய கோண்ட்வானா நிலத்தின் நீட்சி என்னவானது என புரிந்து கொள்ள காலநிலை, கடல் மட்டம் மற்றும் நில நகர்வு முதலியவற்றை கண்டு கருதுகோள்களை உருவாக்கலாம்.

மேலும் 60000 வருடங்களுக்கு முந்தைய மரபணு தொடர்ச்சி உசிலம்பட்டி பொன்மாணிக்கம் பகுதியின் விருமாண்டி என்பவரிடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மடகாஸ்கரின் மாடு அணையும் போட்டியின் தொடர்ச்சி, மதுரை அவனியாபுரம் வரை இருக்கிறது. அதே போல் ஈழத்தில் புழங்கும் தமிழ்ப் பெயர்கள் ஆப்கானிஸ்தானிய கிராமங்களுக்குள்ளும் புழங்கப்படுகிறது. எனவே ஆதித்தமிழர் வாழ்வு செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் பயணித்திருக்கிறது.

“ஆதி தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? - குமரிக் கண்டம் உண்மையா ?” : சிறப்புக் கட்டுரை!

ஆனால் அதை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தால் மட்டுமே உலகரீதியான ஏற்புக்கு தமிழை கொண்டு செல்ல முடியும். அதை விடுத்து முன்னோர் வழிபாட்டை கொண்ட தமிழரின் வாழ்வியலை சிவனுடன் முடிச்சு போட்டால் சிவனுடன் சேர்ந்து ஆரியனும் வருவான்.

சிந்துவெளி முத்திரையில் 'குதிரை'யை கண்டதாக ராஜாராம் என்கிற பார்ப்பனர் விட்ட கட்டுக்கதை உலகப் பிரசித்தி பெற்றது. ஆரிய, பார்ப்பன வாழ்வும் மொழியும் திராவிடத்தை சேர்ந்தவை என இட்டுக்கட்டுவதற்கான முயற்சி பல முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் எனக்கு என் பெருமையை விட அறிவியலே முக்கியம். அறிவியல் மட்டுமே உண்மையை மீட்கும் வழி.

உண்மையே பெருமை; கட்டுக்கதைகள் அல்ல!

banner

Related Stories

Related Stories