வைரல்

Passion.. இன்றைய இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை: ஏன்? எதனால்?

வாழ்க்கையை என்னவாக வரையறுக்கிறோம் என்பதும் அதில் வேலையை என்னவாக வரையறுக்கிறோம் என்பதும் முக்கியமாகிறது.

Passion.. இன்றைய இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை: ஏன்? எதனால்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Passion-உடன் தொடர்பு கொள்ளக்கூடிய இன்னொரு வார்த்தை Work Life Balance. பல பல நேர்காணல்களில் நாம் பயன்படுத்தும் வார்த்தை.

அதாவது Work-க்கும் Life-க்குமான balance-ஐ குறிக்கும் சொல். இந்த வார்த்தையை நான் பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் என்னுடைய புரிதல் மிக எளிமையானது. என்னுடைய வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையே ஒழுங்கை நான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது என் வாழ்க்கையை வேலை விழுங்கிவிடக் கூடாது. என் வேலையை வாழ்க்கையும் விழுங்கிவிடக் கூடாது. இரண்டுக்கும் இடையிலான சமநிலையை குறிக்கும் சொல்லே இந்த Work Life Balance என்ற வார்த்தை.

எது work? எது life?

வாழ்க்கையை என்னவாக வரையறுக்கிறோம் என்பதும் அதில் வேலையை என்னவாக வரையறுக்கிறோம் என்பதும் முக்கியமாகிறது.

Passion.. இன்றைய இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை: ஏன்? எதனால்?

என்னுடைய வேலை என்னுடைய வாழ்க்கையை நிறைவுபடுத்தவில்லை எனில் அது எனக்கான வேலை இல்லை. வாழ்க்கையை நிறைவு செய்வது என்பது உறவுகளை, நட்புகளை எல்லாம் தவிர்த்துவிட்டு தன்னலமாக யோசித்து என் வளர்ச்சியை மட்டுமே நோக்கி ஓடுவது கிடையாது. அது எந்த உறவையும் நம்முடன் நெருங்க விடாது. ஏனெனில் எல்லா உறவையும் என்னுடைய வளர்ச்சிக்கு மட்டுமே நான் பயன்படுத்தப் போகிறேன் எனில், எவர் என்னுடன் நிற்க போகிறார்? நான் இச்சமூகத்துக்கும் இங்கிருக்கும் உறவுகளுக்கும் பதில் பங்களிப்பு ஏதும் கொடுக்காமல் இருக்கையில், இச்சமூகமும் இந்த உறவுகளும் என்னை ஏன் தேடப் போகின்றன?

ஒருவேளை இந்த உறவுகளுக்கும் சமூகத்துக்கும் பங்களிப்பு கொடுப்பதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால், என்னுடைய விருப்பு வாழ்க்கை என்பதை எட்டவே முடியாது.

உறவுகளுக்கான பங்களிப்பை நான் கொடுக்க பணம் என்பதை அடிப்படை நிர்ப்பந்தமாக இச்சமூகம் ஆக்கி வைத்திருக்கிறது. அந்த பணத்தை அடைய, அதை கூலியாய் தரும் ஒரு வேலையை நான் பெற வேண்டியது கட்டாயமாகிறது. அதில் அடைகிற பணமும் என்னுடைய தேவையை பூர்த்தி செய்ய வழி தரவில்லை. முடிவில் என் விருப்ப வாழ்க்கை தூரத்து நிலாவாகவே காய்ந்து கொண்டிருக்கிறது.

Passion.. இன்றைய இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை: ஏன்? எதனால்?

மிக எளிமையாக ஒரு பதிலை கொடுக்க முடியும். பெற்றோரின் நிர்பந்தத்தை, தேவைகளை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்கிற பதில்! அதாவது அவர்களை நட்டாற்றில், எக்கேடும் கெட்டு போகட்டும் என்கிற வழி. ஏற்கனவே இச்சமூகம் கொண்டிருக்கும் ஒரு வகை உறவுகளின் வழியாகவே நாம் பிறக்கிறோம். வளர்கிறோம். இங்கு இப்படியான சமூக உறவு இருப்பதற்கு நானும் காரணமல்ல. என் பெற்றோரும் காரணமல்ல. நான் பலியாகக் கூடாது என்கிற எண்ணம் எத்தனை நியாயமோ அதே அளவுக்கான நியாயம் என்னை சார்ந்திருக்கும் உறவுகளையும் பலியாக்கிடக் கூடாது என்பதுதான். என்னுடைய விடுதலை என்பது பிறரின் விடுதலையிலிருந்தே தொடங்குகிறது.

அடுத்த கேள்வி ஒன்று எழுகிறது.

தொடர்ச்சியாக இந்த வட்டம் இப்படியேதானே சுழன்று கொண்டிருக்கும், எதையும் ஒதுக்காமல் தவிர்க்காமல், என்னை பற்றி மட்டும் சிந்திக்காமல் நான் எதையும் பெற்றுவிட முடியாதே என்ற கேள்வி.

இப்போது work life balance-ஐ பற்றி நீங்கள் சிந்தியுங்கள். இப்போது passion-ஐ பற்றி சிந்தியுங்கள். நான் விரும்பும் வாழ்க்கையும் வேலையும் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு எத்தனை privilegeous என்பது புரிய வரும்.

இங்கு எவனும் விருப்பப்பட்டு விரும்பாத வாழ்க்கைக்கு சென்று சேரவில்லை. விருப்பப்பட்டு இந்த மெகா முதலாளித்துவ உற்பத்தி சக்கரத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கவில்லை. இங்கு இருக்கும் சமூக உற்பத்தி உறவுமுறை எப்படியேனும் மாறி நம்மை விடுவித்துவிடாதா என்ற ஏக்கத்துடனேயே privileged ஆக இருக்கும் நம் அனைவரின் passionகளும் நிறைவேற நசுங்கிக் கொண்டிருக்கிறான்.

Passion.. இன்றைய இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை: ஏன்? எதனால்?

மனிதன் தன் வாழ்க்கைக்கும் விருப்பங்களுக்குமே அந்நியமாவது இப்படித்தான். இதைத்தான் Alienation எனக் கூறுகிறார் மார்க்ஸ்.

பற்சக்கரங்களில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கும்போது போதையிலேயே சுழன்றிக் கொண்டிருக்கும் வரை நல்லது. மயக்கத்திலிருந்து விழித்துவிட்டால் மிகவும் கஷ்டம். அம்மணாண்டிகளின் ஊரில் கோவணாண்டிக்கு கிடைக்கும் மரியாதையே கிடைக்கும்.

தலையில் கட்டிவிட்டிருக்கும் கேரட்டை பிடிக்க ஓடி ஏமாந்தழியும் குதிரைப் போல பொய்களை மட்டுமே முதலாளித்துவம் கொடுத்துக் கொண்டிருக்கும். நமக்கான வாழ்க்கையை அடையவும் நாம்தான் முயல வேண்டும். கவனியுங்கள். ‘நாம்’ என்றே சொல்லியிருக்கிறேன், ‘நானெ’ன்று அல்ல. ‘நான்’ என தனிமனிதவாதமும் தன்முனைப்பும் பேசினால், உங்களுக்கு முதலாளித்துவம் ஊற்றிக் கொண்டிருக்கும் போதையில் மயங்கி, சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கிறீர்கள் என பொருள்.

John Lennon உங்களுக்கு தெரியும்தானே? அவன் இத்தகைய வாழ்க்கையை பற்றி இப்படி சொல்லியிருக்கிறான்:

‘வாழ்க்கையை பற்றி பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கையில் நமக்கு நேர்கிறதே.. அதுதான் வாழ்க்கை!’

அதைப் புரிந்து கொள்ளும்போதுதான் நீங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறீர்கள்!

banner

Related Stories

Related Stories