உணர்வோசை

'BREAK UP' - காதலுக்கு எப்படி உரிமையும் காரணமும் சொல்ல முடியாதோ அதே போலத்தான் பிரிவுக்கும் !

காதல் பிரிவை என்னவாக நாம் எதிர்கொள்கிறோம் என யோசிக்கையில் ஒரு சமூகமாக பெரும் பின்னடைவில் இருக்கிறோம் என்பதே துலக்கமாகிறது

'BREAK UP' -  காதலுக்கு எப்படி உரிமையும் காரணமும் சொல்ல முடியாதோ அதே போலத்தான் பிரிவுக்கும் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

காதலுறவை விட அழகான விஷயம் பிரிவு!

ஆனால் அப்பிரிவை என்னவாக நாம் எதிர்கொள்கிறோம் என யோசிக்கையில் ஒரு சமூகமாக பெரும் பின்னடைவில் இருக்கிறோம் என்பதே துலக்கமாகிறது.

பெரும்பாலும் பிரிவை நமக்கு நேர்ந்த தோல்வியாக பார்க்கிறோம். என்னுடன் பழகி விட்டு நீ எப்படி வேறு ஒருவரை மணம் முடிக்கலாம் என்கிற உடைமை உணர்வு பற்றி நாம் எரிகிறோம். பிரிவை ஏற்க முடியாமல் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறோம். அல்லது தற்கொலை செய்து கொண்டு பிரிந்தவரை வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வு சுமக்க வைக்கிறோம்.

இரண்டறக் கலக்கும் காதலில் பிரிவு என்பதற்கான சூழல் உருவானதும் உடனே இரு வேறு ஆட்களாக மாறி வன்மத்தை அடுத்தவர் மீது வாரி வாரி இறைக்கிறோம்.

'BREAK UP' -  காதலுக்கு எப்படி உரிமையும் காரணமும் சொல்ல முடியாதோ அதே போலத்தான் பிரிவுக்கும் !

எங்கே போனது காதல்?

ஒரு பிரிவை எப்படி அனுமதிக்கிறோம், ஏற்கிறோம் என்பதில்தான் காதலை பற்றிய நம் மதிப்பீடும் நமக்கான முதிர்ச்சியும் உள்ளது. பெரும்பாலான உறவுப் பிரிவுகளில் வன்மம்தான் தலைவிரித்தாடுகிறது.

விவாகரத்துக்கு நிகரான பிரிவுகள்தான் காதலுறவுகளிலும் நேர்ந்து கொண்டிருக்கின்றன. ரொக்கக்கணக்கில் உறவு வாழ்க்கை பேசப்படுவதை விட அருவருப்பு என்ன இருந்துவிட முடியும்? சட்டரீதியான விவாகரத்திலாவது பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயமான முறையில் ஈட்டுத்தொகை வழங்கப்படும். சட்டத்துக்குள் வராத உறவுகளில் எல்லாம் ஈட்டுத்தொகை, செலவைப் பட்டியலிட்டு வசூலிப்பது வக்ரத்தின் உச்சம்.

'If you love a flower, don’t pick it up, because if you pick it up it dies and it ceases to be what you love. So if you love a flower, let it be.' சொன்னவன் Osho!

மலராக ஓர் உறவு மலர்கையில் அதை பறித்திட கூடாது என்கிறான். நாம் பறிப்பது மட்டுமல்லாமல், அதை கீழே போட்டு நசுக்கவும் செய்கிறோம். பின்னர் அம்மலர் வளர தண்ணீர் ஊற்றுவதற்கு ஆன செலவையும் கேட்கிறோம்.

பிரிவு இயற்கை. அனுமதியுங்கள். அதுவும் ஒரு மலர்தான். பிரிவு பூக்கிறது எனில் அதையும் ரசியுங்கள். அதற்கு உரிமை கொண்டாடாதீர்கள். காரணங்கள் சொல்லாதீர்கள். காதலுக்கு எப்படி உரிமையும் காரணமும் சொல்ல முடியாதோ அதே போலத்தான் பிரிவுக்கும்.

'BREAK UP' -  காதலுக்கு எப்படி உரிமையும் காரணமும் சொல்ல முடியாதோ அதே போலத்தான் பிரிவுக்கும் !

பிரிவுக்கு பின் நீங்கள் நீங்கும் நபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவது, அவதூறு பேசுவது, நண்பர்களை கொண்டு ஒரு கட்சி கட்டி அந்த நபரை குறை பேசி, காயப்படுத்தி, அவரை குற்றவுணர்வுக்கு உள்ளாக்குவது எல்லாம் எந்த வகை நாகரிகம்? சிந்து சமவெளியா, கங்கை சமவெளியா?

காதலைப் போலவே பிரிவுக்கும் காரணங்களும் தேவையில்லை. நியாயங்கள் தேவையில்லை. அதை மீறி ஒருவர் காரணமோ நியாயமோ உங்களிடம் வந்து சொன்னால் அவர்தான் பிரச்சினை என புரிந்துகொள்ளுங்கள்.

Break Up is a state. Don't reason about it. It gets fucked up only when you start reasoning it

banner

Related Stories

Related Stories