வைரல்

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்களா இவர்கள்?.. யார் இந்த மில்லென்னியல்கள்?: உங்களுக்கு தெரியுமா?

மில்லென்னியல்களின் குணங்கள் என பரவலாக சொல்லப்பட்டிருப்பவை என்னவென முதலில் அறிந்து கொள்வோம்.

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்களா இவர்கள்?..  யார் இந்த 
மில்லென்னியல்கள்?: உங்களுக்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஒரு காலம் இருந்தது. Mp3 டேப்ரிக்கார்டர் கேசட்டில் 60 பாடல்கள் பதிய முடியுமென்பதை தெரிந்து கொண்டு, பிடித்தமான 60 பாடல்களை எழுதி பட்டியலிட்டு கொண்டு சென்று கடையில் கொடுத்தால், இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு கடைக்காரர் வர சொல்வார். கைக்கு வரும் அந்த கேசட்டில் மனதுக்கு பிடித்த அத்தனை பாடல்களும் ஒருங்கே இருக்கிறதென்ற பூரிப்பில் தினமும் போட்டுக் கேட்டு கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. அங்கிருந்து தொடங்கி பிறகு டேப் ரிக்கார்டர் என்பதே தொலைந்து சிடி என்ற லோக வழக்கத்துக்குள் புகுந்து, பின் அதையும் தாண்டி 'ஐபோட்'டுக்கு வந்து, இணையத்துக்கு வந்து தற்போது மொபைலுக்கு வந்து நிற்கிறது என் இனிய பாடல்கள்.

சிடியிலிருந்து மொபைலுக்கான இந்த இடைப்பட்ட பயணம் மட்டும் ஒரு வழக்கமான காலச்சூழலில் நடைபெறுவதென்றால் குறைந்தது ஒரு நூற்றாண்டு ஆகும். செலுலாய்டில் இருந்து டிஜிட்டலுக்கு வந்த சினிமாவும் மை அச்சிலிருந்து டிஜிட்டலுக்கு மாறிய அச்சுத்துறையும் அந்த ஒற்றை தாண்டலுக்கே 60 வருடங்கள் எடுத்துக் கொண்டன. கேசட் டு மொபைல் என்கிற நான்கைந்து கட்ட வளர்ச்சிகளை தாண்ட வெறும் முப்பதே வருடங்கள் ஆகியிருக்கின்றன. இப்படி அசுர பாய்ச்சலில் காலமும் தொழிநுட்பமும் இருந்த கட்டத்தில் இவ்வுலகில் உதித்தவர்களே மில்லென்னியல்கள் என்றழைக்கப்படுபவர்கள்!

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்களா இவர்கள்?..  யார் இந்த 
மில்லென்னியல்கள்?: உங்களுக்கு தெரியுமா?

மில்லென்னியல்களின் குணங்கள் என பரவலாக சொல்லப்பட்டிருப்பவை என்னவென முதலில் அறிந்து கொள்வோம்.

எல்லா இடங்களிலும் தன்னை முன்னிறுத்துவதற்கு படாத பாடு படுவார்கள். அக்காலத்தில் கற்று தெளிந்து அடையும் செருக்கை, கற்கத் தொடங்கும்போதே அணிந்து கொள்வார்கள். கருவிலேயே திருவும் அறிவும் கொண்டிருந்தவர்கள் என தங்களை தாங்களே நம்புவார்கள்.

இந்த வகையிலான வாழ்க்கை மற்றும் சிந்தனை முறை முன்னிருக்கவில்லையா என கேட்டால், இருந்திருக்கிறது. எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறது. அவற்றுக்கு பிழைப்புவாதம், சுய தம்பட்டம், அகங்காரம் என்றெல்லாம் நாம் பெயர் சூட்டியிருக்கிறோம். அத்தகையானோர் குறைந்த சதவிகிதத்துக்கு இருந்தார்கள். காரணம், அவர்களை சமூகம் அப்போது நல்லுதாரணங்களாக கொண்டதில்லை.

இந்த தலைமுறைக்கு எந்த காலத்தையும் விட அறிவு என்பது விரல் நுனியில் இருக்கிறது. எலியின் ஒரு க்ளிக்கலில், ஒரு ஸ்க்ரீன் இழுவையில் இருக்கிறது. அவற்றை எடுத்து பயன்படுத்துகிறார்கள். சந்தேகமே இல்லை. ஆனால் அந்த அறிவை, அந்த கற்றலை கொஞ்சமேனும் ப்ராசஸ் செய்கிறார்களா என கேட்டால், இல்லை என்பதே பதில்.

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்களா இவர்கள்?..  யார் இந்த 
மில்லென்னியல்கள்?: உங்களுக்கு தெரியுமா?

மில்லென்னியல்களின் காதல் வகை உறவுகள் யாவுமே பெரும்பாலும் ‘நான் தூக்கி வளர்த்த துயரம் நீ’ என்கிற பாணியிலேயே இருக்கும். காதலை ஒரு பாணியில் விரும்புவார்கள். அந்த பாணி அவர்களின் பாணியாக மட்டுமே இருக்க வேண்டும். அடுத்தவரின் பாணியில் இருந்தால் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். குறைந்த பட்சம் அந்த அடுத்தவரின் பாணியுடன் தன் பாணி ஒத்துப்போகும் மையப்புள்ளியை கண்டுபிடிக்கும் முயற்சியை கூட எடுக்க மாட்டார்கள். பிறகு, தனிமையில் உழலுவதாக புலம்புவார்கள்.

பயணம் செல்வார்கள். ஆனால் மக்களுடன் புழங்க மாட்டார்கள். பறவை, மரம், ஆறு என ஒரு தனித்தன்மை வாய்ந்த நபராக மட்டுமே தங்களை காட்ட முயலுவார்கள். அந்த பயணங்கள் யாவும் சமூக தளங்களிலும் வாட்சப் ஸ்டேட்டஸ்களும் நிரம்பியிருக்கும். ‘நான் இந்த பகுதிக்கு சென்றேன்’ என அறிவிப்பதே அவர்களுக்கு முக்கியமாக இருக்கும். அந்த பகுதியில் இருத்தல் அல்ல!

அடிப்படையான எல்லா மில்லென்னியல்களிடமும் ‘நான்’ என்கிற முன்னிறுத்தலும் முனைப்பும் ‘தனியாகுதல்’ தன்மையும் இருக்கும். ஆங்கிலத்தில் individualism என்போம். தமிழில் தனிமனிதவாதம் என்போம்.

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்களா இவர்கள்?..  யார் இந்த 
மில்லென்னியல்கள்?: உங்களுக்கு தெரியுமா?

பரிணாம வெள்ளப்போக்கில் நாம் நிச்சயமாக பின்னோக்கி சென்று பழைய சமூகத்தின் குழு முறைகளை கொள்ள முடியாது. கொள்ளவும் கூடாது. அந்த முயற்சிகள் அனைத்தையும் அடித்து உடைத்து செல்வதே இயக்கவியல்! எல்லா காலங்களிலுமே மனித பரிணாமத்தின் இருப்புக்கு அடிப்படை தேவையாக இருந்தது குழு வாழ்க்கைமுறை என்ற புரிதல் மட்டுமே நாம் வேண்டுவதெல்லாம்.

மனிதன் உருவானதில் குழு வாழ்க்கை முறைக்கு பங்களிப்பு இருந்தது. பொதுவாக உயிர்கள் எவை எனினும் குழுவாயிருத்தலே பாதுகாப்பு. வாழ்வு. வாழ்வின் நீட்சி எல்லாமும். தனியாக இருக்கும் எதுவும் நீடிக்க முடியாது. குழு வாழ்முறைக்கு தனிமனிதவாதம் உவப்பு கிடையாது.

MP3 கேசட்டிலிருந்து சடாரென மொபைல் இசைக்கு தாவும் தொழில்நுட்பத்தின் வேகத்தில் வாழ்க்கையிலும் தாவித்தாவி ஓடிக் கொண்டிருக்கும் மில்லென்னியல்களை புரிதலின்மையை பார்க்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது. அவர்கள் சத்தமில்லாமல் இச்சமூகத்துக்கு தேவையான தீங்குகளை அவர்களறியாமல் அனுதினமும் இழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories