வைரல்

ஒரு ஆட்டோ.. 27 பேர் பயணம்.. உத்தர பிரதேச போலிஸாரை திக்குமுக்காட செய்த பயணிகள்!

உத்தர பிரதேசத்தில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம் செய்த சம்பவம் போலிஸாரை அதிர்ச்சியடை வைத்துள்ளது.

ஒரு ஆட்டோ.. 27 பேர் பயணம்.. உத்தர பிரதேச போலிஸாரை திக்குமுக்காட செய்த பயணிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஃபதேப்பூர் பகுதியில் அதிவேகமாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இதை கவனித்த அங்கிருந்த போலிஸார் உடனே ஆட்டோவை மடக்கி நிறுத்தியுள்ளனர்.

பின்னர் ஆட்டோவில் இருந்தவர்களை வெளியே வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து ஒவ்வொருவாரக சிறியவர்கள் முதல் 27 பேர் ஆட்டோவில் இருந்து வெளியே வந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு ஆட்டோ.. 27 பேர் பயணம்.. உத்தர பிரதேச போலிஸாரை திக்குமுக்காட செய்த பயணிகள்!

இந்த ஆட்டோவில் 6 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஆனால் எப்படி 27 பேர் பயணித்து வந்தனர் என புரியாமல் ஒரு நிமிடம் போலிஸார் திக்குமுக்காடியுள்ளனர். மேலும் இது குறித்து ஆட்டோவை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், அனைவரும் பக்ரீத் தொழுகையை முடித்து விட்டு வீட்டிற்கு ஒன்றாகத் திரும்பும் போது இவர்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோவில் இருந்து 27 பேரும் ஒவ்வொருவராக இறங்கி வரும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories