வைரல்

காதலுக்கு இடையூராக உள்ளதாக சமூக ஊடகம்.. உண்மை என்ன?

எப்படி தொடங்கி, எதன் வழியெல்லாம் வந்து, இன்று எங்கு வந்து நிற்கிறது? ஆச்சரியம்தான்.

காதலுக்கு இடையூராக உள்ளதாக சமூக ஊடகம்..  உண்மை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

காதல்தான் எத்தனை புதிரானது?

எப்படி தொடங்கி, எதன் வழியெல்லாம் வந்து, இன்று எங்கு வந்து நிற்கிறது? ஆச்சரியம்தான்.

உங்கள் வாட்சப்பில் உங்கள் காதலி ஆன்லைனில் இருந்து உங்களிடம் பேசவில்லையென்றால், காதல் தோற்றுபோய் விடுகிறது. நீல டிக்குகள் விழுந்து பதில் இல்லையென்றால், உறவையே முறித்து கொள்ளலாம்.

அந்த காட்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்களும் உங்கள் மொபைல்ஃபோனும். கையில் போனை வைத்துக் கொண்டு வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அலுலகத்தில் இருந்தால் ஐந்து விநாடிகளுக்கு ஒரு முறை பார்ப்பீர்கள்.

காதலுக்கு இடையூராக உள்ளதாக சமூக ஊடகம்..  உண்மை என்ன?

முகநூலில் ஆன்லைன் காட்டி பேசவில்லை என்றால் பிரச்சினை. ‘ஹாய்’ என பேசி பதில் வரவில்லையெனில் கதை முடிந்தது. பதிவுக்கு லைக் போடவில்லையெனில் சண்டை. பின்னூட்டத்துக்கு பதில் பின்னூட்டம் இல்லையெனில் விரிசல்.

போன் அடித்து எடுக்கவில்லையெனில் பதற்றம். இரண்டாம் அழைப்பாக போயும் பதில் அழைப்பு வரவில்லையெனில் அவமரியாதை. குறுந்தகவல் பெறப்பட்டு பதில் கிட்டவில்லையெனில் விலகல்.

அலைகள் நம் காதல்களின் கண்ணாடிகளாக மாறியிருக்கின்றன. சரியா தவறா தெரியவில்லை. இதுதான் யதார்த்தம். தவறு இல்லை என்று கூட சொல்லலாம். சரி என்று பார்த்தால், ஆதி மனிதியை எது ஈர்த்தது? எது பிணக்கு கொடுத்தது? மான் கறி, சிக்கி முக்கி கற்கள்? போன தலைமுறையில் ஈர்ப்புக்கு மல்லிகை பூ, அல்வா.

காதலுக்கு இடையூராக உள்ளதாக சமூக ஊடகம்..  உண்மை என்ன?

எல்லா காலங்களிலும் காதல் கண்ணாடிகள் இருந்திருக்கின்றன. அதுபோல்தான் இன்றைக்கு தொழில்நுட்பம். அவ்வளவுதான். ஆகவே தவறு என பேச வேண்டுமென்றால் காதலுக்கு கண்ணாடிகள் தேவையா என்றுதான் பேச வேண்டும். கண்ணாடிகள் தொழில்நுட்ப உபகரணங்களாய் எப்படி இருக்கலாம் என பேச முடியாது. அதை விட எளிது யதார்த்தத்தை புரிந்து கொள்வதுதான்.

முகநூல், உள்பெட்டியை கொண்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாட்சப் உரையாடல்களை அழித்து கொள்ளலாம் என்ற உண்மையை உணர்வது மிக எளிது. நமக்கு போட்டியாளர்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையை குற்றமற ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

கல்யாணம் முடிந்ததும் நான்தான் உனக்கு முதலாளி என சாட்டை சுழற்ற முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் காதலில் உருவாகி கொண்டிருக்க வேண்டும். மேம்பட்டு கொண்டிருக்க வேண்டும். தினமும் பரீட்சை எழுதி கொண்டிருக்க வேண்டும்.

காதலுக்கு இடையூராக உள்ளதாக சமூக ஊடகம்..  உண்மை என்ன?

அந்த அளவுக்கு வெளிப்படையாகவோ அல்லது உடையும் இலகுடனோ இருக்கும் காதலை பயின்று வைத்திருக்கும் மேம்போக்கான நம்மைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். கூடவே காதலையும் பெண்ணையும் வெல்ல வேண்டிய பண்டமாக ஆக்கி வைத்திருப்பவர்களையும் சொல்ல வேண்டும்.

நம்முடைய காதல் எல்லாம் வெறும் ஒரு பாஸ்வேர்ட் அளவு மட்டுமே உறுதிகொண்டவை. அதைவிட அடர்த்தியாக, பரந்த மனப்பான்மையோடு நம் காதலை வளர்த்தெடுக்காட்டால், கண்ணாடிகளிடம் நாம் தோற்று போவோம்.

banner

Related Stories

Related Stories