சினிமா

சினிமாவில் ஹிட்லருக்கு கொடூர தண்டனை வழங்கிய இயக்குநர்.. அது என்ன படம்?.. யார் அந்த இயக்குநர்?

ஹிட்லர் தற்கொலைதான் செய்து கொண்டார். ஆனால் குவெண்டின் டாரண்டினோவுக்கு அது போதவில்லை.

சினிமாவில்  ஹிட்லருக்கு  கொடூர தண்டனை வழங்கிய இயக்குநர்..  அது என்ன படம்?.. யார் அந்த இயக்குநர்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

சினிமாவைப் பொறுத்தவரை பல வித இலக்கணங்கள் உள்ளன.

கமர்ஷியல் சினிமா, அவார்ட் சினிமா, ஆக்‌ஷன் சினிமா, காமெடி சினிமா, ஆவண சினிமா எனப் பல ரகங்கள். அதே போல் சினிமாவில் சொல்லப்படும் கதைகளுக்கும் பலவகை பாணிகள் இருக்கின்றன. ரியலிசம், சர்ரியலிசம், மேஜிகல் ரியலிசம், மசாலா எனப் பல வகைகள். எனினும் கதைகளில் இருக்கும் உண்மைத்தன்மையை எப்படி அளப்பது?

உண்மையாக ஒரு சூழலை விளக்க வேண்டும் என்பது சினிமாவுக்கு - எந்த படைப்புக்குமே கூட - இருக்கக் கூடிய முக்கியமான விதி. ஆனால் அதையும் உடைக்கும் தருணங்கள் சினிமாவில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

Inglourious Basterds என ஒரு படம். குவெண்டின் டரேண்டினோ இயக்கியிருப்பார். நான் லீனியர் திரைக்கதை கொண்ட படம்.

சினிமாவில்  ஹிட்லருக்கு  கொடூர தண்டனை வழங்கிய இயக்குநர்..  அது என்ன படம்?.. யார் அந்த இயக்குநர்?

கதைப்படி ஹிட்லரை கொல்வதற்காக இரண்டு குழு இயங்கும். ஒரு தீவிரவாதக் குழு, ஹிட்லரின் படையினரால் குடும்பத்தை இழந்த யூதப் பெண். இறுதியில் யூதப் பெண்ணே வெல்வார். ஆம், அவர் பணிபுரியும் திரையரங்கில் ஒரு படக்காட்சிக்கு ஹிட்லரை வர வைத்து தியேட்டருக்குக் குண்டு வைத்து, வெடிக்கச் செய்து பின் தீவிரவாதக் குழு அங்கு வந்து ஹிட்லரை சல்லடையாக்கிக் ஹிட்லரைக் கொல்வதாக படம் முடியும்.

இருங்கள்.. தியேட்டரில் ஹிட்லர் கொல்லப்பட்டாரா.. செஞ்சேனை வரும் அச்சத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுதானே ஹிட்லர் இறந்தார்?

ஆம். ஹிட்லர் தற்கொலைதான் செய்து கொண்டார். ஆனால் குவெண்டின் டாரண்டினோவுக்கு அது போதவில்லை. ஹிட்லரால் அழித்தொழிக்கப்பட்ட யூதரால் அவன் கொல்லப்பட விரும்பினார். எனவே சினிமாவைத் தொழிலாக கொண்டிருக்கும் குவெண்டின் டாரண்டினோ தன்னுடைய நீதிமன்றமான தியேட்டருக்குள் ஹிட்லரைக் கொண்டு வருகிறார். அவனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய நீதியை ஓர் யூதப் பெண் கொண்டு கொடுக்கிறார்.

சினிமாவில்  ஹிட்லருக்கு  கொடூர தண்டனை வழங்கிய இயக்குநர்..  அது என்ன படம்?.. யார் அந்த இயக்குநர்?

படத்தில் வரும் ஹிட்லரின் முடிவைப் பற்றி கேட்டதற்கு, 'மரணம் என்கிற நிலையைத் தாண்டி ஹிட்லருக்கு தண்டனை வழங்கினேன். முழுமையாக அவன் சுடப்பட்டு, எரிக்கப்பட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஒன்றுமில்லாமல் ஆக்கியிருப்பேன்,' என்கிறார் இயக்குநர். இந்தப் படம் மட்டுமல்ல, அவரின் 'Once upon a time in hollywood' படத்திலும் இதே முறையைத்தான் பின்பற்றியிருப்பார் இயக்குநர்.

சினிமாவில்  ஹிட்லருக்கு  கொடூர தண்டனை வழங்கிய இயக்குநர்..  அது என்ன படம்?.. யார் அந்த இயக்குநர்?

ஹாலிவுட் இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியின் வீட்டுக்குச் சென்று கர்ப்பமான அவரின் மனைவியைக் கொன்ற ஒரு சைக்கோ கொலைகாரனை, தன் படத்தில் ரோமன் போலன்ஸ்கி வீட்டுக்கு அவன் செல்வதற்கு முன்னமே கொன்றிருப்பார். இதுபோல் உண்மைச் சம்பவத்தைக் கொண்டு சினிமாவில் பலவித விளையாட்டுகள் விளையாடப்படுவதுண்டு. அதனால்தான் உண்மைச் சம்பவத்தை தழுவிய கதை என disclaimer-ம் போடப்படுகிறது. தழுவியக் கதை என்றால் அது உண்மைச் சம்பவத்தை அப்படியே காட்டப்பட வேண்டியதில்லை என்பதுதான் பொருள்.

banner

Related Stories

Related Stories