வைரல்

வாழ்க்கையில் நாம் இழந்து கொண்டிருப்பது எதை?.. உங்கள் கண்களுக்கு மட்டும் ஏன் படவில்லை?

இன்னும் எத்தனையெத்தனையை வாழ்க்கையில் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்? கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உழலுவதல்ல வாழ்க்கை.

வாழ்க்கையில் நாம் இழந்து கொண்டிருப்பது எதை?..  உங்கள் கண்களுக்கு மட்டும் ஏன் படவில்லை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

On running after one's hat என்ற சொற்றொடரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பள்ளி பிராயத்தில் ஆங்கில பாடத்தில் வந்த ஒரு பகுதி. அநேகமாக பத்திலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புக்குள் இருக்கலாம். ஆசிரியர் நடத்தி கூட அல்ல. வெறுமனே படித்ததிலேயே மனதில் பதிந்துவிட்டது. G.K.Chesterton எழுதியக் கட்டுரை அது.

ஒரு தொப்பியை விரட்டிக் கொண்டு ஓடுவதால் என்ன நிகழும்? அந்த தொப்பிக்கு உரிமையாளர் எரிச்சல் அடையலாம். மற்றவர் தன்னை பார்த்து சிரிப்பதை அவமானமாக கருதி குமையலாம். அல்லது, அதை ஒரு விளையாட்டாக கருதிக்கொண்டு ஆர்வத்துடன் விரட்டி ஓடலாம்.

கோணங்கள் தானே வாழ்க்கை?

வாழ்க்கையில் நாம் இழந்து கொண்டிருப்பது எதை?..  உங்கள் கண்களுக்கு மட்டும் ஏன் படவில்லை?

குடும்பத்துடன் ரயிலுக்கு காத்திருக்கிறீர்கள். நேரம் போகிறது. ரயில் வந்த பாடில்லை. நேரம் விரயமாகிக் கொண்டே இருக்கிறது. பொறுமை எல்லைக்கு வந்துவிட்டது. கோபம் தலைக்கேறுகிறது. உங்களின் உடனடி இலக்கு உங்கள் குடும்பம். கத்துவீர்கள். ரயில் வந்ததும் மூட்டை முடிச்சை தூக்கிக் கொண்டு சத்தம் இல்லாமல் ரயிலேறத்தான் போகிறீர்கள். ஆனாலும் அந்த இயலாமை?

எதிர்மறை உணர்ச்சிகள் வரும் அந்த காலவெளி! அதை எப்படி கடப்பது? அதே ரயில் நிலையத்தில், உங்கள் குழந்தை என்ன செய்திருக்கும் என யோசியுங்கள். கண்டிப்பாக கத்தியிருக்காது. கோபப்பட்டிருக்காது. விளையாடிக் கொண்டிருக்கும். மின்னி மின்னி எரியும் சிவப்பு சிக்னல் விளக்கை ஆச்சரியத்துடன் ரசித்து கொண்டிருக்கும். குழந்தை புழங்கும் ஓர் அற்புத உலகம் நீங்கள் இருக்கும் அதே ரயில் நிலையத்தில்தான் இருந்திருக்கும். உங்கள் கண்களுக்கு மட்டும் ஏன் படவில்லை?

வாழ்க்கையில் நாம் இழந்து கொண்டிருப்பது எதை?..  உங்கள் கண்களுக்கு மட்டும் ஏன் படவில்லை?

கோணங்கள்!

ரயில் தாமதமாக வருவது வேலையை கெடுத்து விடாதா? திட்டமிட்ட வேலை குலையும்போது கோபம் வருவதுதானே இயல்பு?

ஆமாம். ரயில் தாமதம், வேலை குலைவு. உண்மைதான். ஆனால் வேலை குலைந்துவிட்டது. வேலை குலையாமல் இருக்கக்கூடிய காலம் கடந்துவிட்டது. அதில் உங்கள் தப்பு ஒன்றுமில்லை. கோபமும், வெறுப்பும் வருகிறதெனில் நீங்கள் அந்த கடந்த காலத்தில் தேங்கிவிட்டீர்கள் என்று பொருள்.

நீங்கள் சற்றும் திட்டமிடாத, எந்த வேலையுமற்ற ஓர் அற்புதமான காலவெளி உங்கள் வாழ்க்கையில் இப்போது சட்டென முளைத்து விட்டது. இப்படி ஒரு ஓய்வு ரசனை காலம் வாய்த்துவிடாதா என நீங்கள் ஏங்கிக்கிடந்தது கிடைத்திருக்கிறது. அதைக் கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? கடந்து போன திட்டக் குலைவையும் அது எதிர்காலத்தில் கொடுக்கப்போகும் கேடுகளும் என உழன்று நிகழ்காலத்தை மறுபடியும் இழக்க போகிறீர்களா?

வாழ்க்கையில் எத்தனை தடவை, தண்டவாளம் இறங்கி, பிளாட்பாரம் ஏறும் வெயிலை ரசித்திருக்கிறீர்கள்? போர்ட்டர் தூக்கி செல்லும் சுமை தனக்கானதுதான் என்ற நம்பிக்கையுடன் பின்னாடியே வாலை ஆட்டிக்கொண்டு செல்லும் அந்த நாய்? மணி அடிக்கும்போதெல்லாம் கொத்தாக கூட்டம் ஒரு திசைக்கு திரும்பி பார்க்கும் அந்த அழகு?

வாழ்க்கையில் நாம் இழந்து கொண்டிருப்பது எதை?..  உங்கள் கண்களுக்கு மட்டும் ஏன் படவில்லை?

இன்னும் எத்தனையெத்தனையை வாழ்க்கையில் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்? கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உழலுவதல்ல வாழ்க்கை. நிகழ்வதுதான் இருத்தல். வாழ்க்கை அதை உணர்ந்தே இருக்கிறது. சுற்றி பார்ப்பதற்கு நேரம் இல்லை என புலம்பும் நமக்குத்தான் வாழ்க்கை இப்படி எதிர்பாராத அற்புத தருணங்களை கொடுக்கிறது. அவற்றில் உலவுங்கள். குழந்தைகளாகுங்கள். காற்றில் பறந்து செல்லும் தொப்பியை விரட்டும் நபரும் உங்களுக்கு தெரிவார். அவருக்கு நீங்கள் உதவலாம். அதை ரசிக்கலாம்.

இப்போது, இங்கே, இந்த இதுதான் வாழ்க்கை!

banner

Related Stories

Related Stories