வைரல்

“சினிமா பாணியில் ஓடும் பைக்கில் ‘சாகச காதலில்’ ஈடுபட்ட காதலர்கள்..” : பதறவைக்கும் பகீர் வீடியோ காட்சி !

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் சினிமா பாணியில் காதலர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சினிமா பாணியில் ஓடும் பைக்கில் ‘சாகச காதலில்’ ஈடுபட்ட காதலர்கள்..” : பதறவைக்கும் பகீர் வீடியோ காட்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் சினிமா பாணியில் காதலர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை டவுன் அருகே செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கின்றனர்.

அப்போது, திடீரென அந்த இளம்பெண் மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் அமர்ந்து, முன்பக்கம் தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து இறுக அணைத்துக் கொண்டார். மேலும் இருவரும் சில்மிஷத்திலும் ஈடுபட்டனர். ஆனால் காதலன், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அப்படியே ஓட்டிச் சென்றார்.

இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்து முகம் சுழித்தனர். இருப்பினும் அந்த காதல் ஜோடி தங்களை மறந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறி இதுபோன்று சாகச காதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மோட்டர் சைக்களில் பயணித்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாக வில்லை. போக்குவரத்து போலிஸார் வாகண எண் கொண்டு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது,. இதுதொடர்பாக வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

banner

Related Stories

Related Stories