வைரல்

“பேருந்தில் மயங்கி விழுந்த இளைஞர்; CPR முதலுதவி மூலம் உயிரை காப்பாற்றிய செவிலியர்”: கேரளாவில் நெகிழ்ச்சி!

கேரளாவில் ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்த இளைஞரின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

“பேருந்தில் மயங்கி விழுந்த இளைஞர்; CPR முதலுதவி மூலம் உயிரை காப்பாற்றிய செவிலியர்”: கேரளாவில் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா அனீஷ். இவர் அங்கமாலி அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு வழக்கம் போல் மருத்துவமனையில் இருந்து பணி முடிந்துவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காக ஷீபா எர்ணாகுளம் செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது பேருந்து சென்றுக்கொண்டிருக்கும் போது, அதில் பயணித்த இளைஞர் ஒருவர், திடீரென இருக்கையில் இருந்து சுருண்டு கீழே விழுந்துள்ளார். அந்த இளைஞர் பேருந்து படிக்கட்டு அருகே மயங்கிக் கிடந்தைக் கண்டு அவரை உடனே மீட்டு, பேருந்தை நிறுத்தியுள்ளார் நடத்துநர்.

பின்னர் பேருந்தில் இருந்த செவிலியர் ஷீபா, இளைஞரின் நாடித்துடிப்பைச் சரிபார்த்தார். அவரது நாடித்துடிப்பு சீரான நிலையில் இல்லாததை உணர்ந்த செவிலியர் ஷீபா, அந்த இளைஞருக்கு உடனடியாக சி.பி.ஆர் சிகிச்சை அளித்துள்ளார்.

“பேருந்தில் மயங்கி விழுந்த இளைஞர்; CPR முதலுதவி மூலம் உயிரை காப்பாற்றிய செவிலியர்”: கேரளாவில் நெகிழ்ச்சி!

சி.பி.ஆர் என்பது இதய- நுரையீரல்களை மீண்டும் இயங்கச் செய்யும் ஒரு முக்கியமான முதலுதவி முறையாகும். இது மாரடைப்பு ஏற்பட்ட ஒரு நபரின் மார்பில் ஒரு சிறப்பு அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவரது மூச்சுகுழலில் சுவாசத்தை ஏற்படுத்தப்படுத்த தூண்டும்.

இந்நிலையில், இளைஞருக்கும் இந்த சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கும் போது அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஆர் மீண்டும் அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சுவாசப்பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து பேருந்து மூலம் அருகில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். பின்னர் அவருக்கு அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஆபத்தில்லாத நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்த இளைஞரை காப்பாற்றிய செவிலியர் ஷீபாவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories