வைரல்

தலைக்கேறிய லைக்ஸ் மோகம்; யானைக்குட்டியை துரத்தி வியூஸ் பார்த்த டிக்டாக் பயனர்; கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்!

காட்டுக்குள் நடந்துவந்த யானைக்குட்டியை துரத்தி டிக்டாக்கில் லைக்ஸ் வாங்கிய பயனருக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே வலுக்கும் கண்டனம்.

தலைக்கேறிய லைக்ஸ் மோகம்; யானைக்குட்டியை துரத்தி வியூஸ் பார்த்த டிக்டாக் பயனர்; கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மனித விலங்கு மோதல்களை தடுக்கச் சொல்லி இயற்கை நல ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் வலியுறுத்தியும் வருகின்றனர். இப்படியான சூழலில் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக இலங்கையில் உள்ள வனப்பகுதியில் யானை ஒன்றினை பயமுறுத்தி வீடியோ வெளியிட்ட நிகழ்வு விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பொதுவாக வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கேமிராக்கள் எடுத்தச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் செல்போன்கள் மூலம் விலங்குகளை போட்டோ எடுக்கக் கூடாதுமென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் விதிகளை மீறி சில சுற்றுலாப் பயணிகள் ஆர்வ மிகுதியால் விலங்குகளுக்கு உணவு கொடுப்பது அதனை சீண்டுவது போன்ற செய்கைகளில் ஈடுபட்டு இறுதியில் அந்த விலங்குகளாலேயே எதிர்வினையாற்றும் வகையில் செயல்படுவது தொடர்ந்து வருகிறது.

அவ்வகையில் இலங்கையில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்த சம்பவம் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. அதன்படி, டிக்டாக் பயனரான ஷாஷிகாகிமந்தா என்பவர் தனது ஜீப்பின் விளக்கை எறியவிட்டபடி காட்டில் இருந்த யானை ஒன்றினை வாகனத்தை இயக்கி விரட்டியிருக்கிறார்.

இதனால் பயந்துப்போன அந்த யானை பின்னோக்கிச் சென்று மரத்தின் பின்னால் ஒளிந்துக்கொண்டுள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த பயனரை பலரும் கண்டித்துள்ளனர்.

மேலும் இதனை ட்விட்டரில் பகிர்ந்த பூர்ணா செனெவிரத்னே என்ற விலங்குகள் நல ஆர்வலர் “இந்த செயல் முழுக்க முழுக்க தவறானது. அருவருப்பானது. சமூக வலைதளங்கள் லைக்ஸ் வாங்குவதற்காக வன விலங்குகளை இப்படியெல்லாம் துன்புறுத்தாதீர்கள். யானையை துன்புறுத்திய அந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். முற்றிலும் இது ஏற்கத்தக்கதே அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கண்டனங்களையும் பெற்றுதை அடுத்து, இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

banner

Related Stories

Related Stories