வைரல்

71,000க்கு ஆசைப்பட்டு 1500 ரூபாயை இழந்த Foodies - தோசை சவாலால் டெல்லி ஓட்டலில் வியாபாரம் விறுவிறு!

10 அடியில் இருக்கும் தோசையை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் 71 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

71,000க்கு ஆசைப்பட்டு 1500 ரூபாயை இழந்த Foodies - தோசை சவாலால் டெல்லி ஓட்டலில் வியாபாரம் விறுவிறு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உணவு பிரியர்களை கவர்வதற்காகவே புதுப்புது சவால்களை பெரும்பாலான ஓட்டல்களில் அண்மைக் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அண்மையில் இணையவாசிகளை கவர்ந்த ஒரு சவால்தான் டெல்லி தோசை சேலஞ்ச். டெல்லி அப்பளம் ஓகே. அது என்ன டெல்லி தோசைனு கேக்குறீங்களா?

டெல்லியில் இருக்கும் ஓட்டல்தான் இந்த தோசை சவாலை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன சவால் என்றால், 10 அடியில் இருக்கும் தோசையை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் 71 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைக் கண்ட உணவு பிரியர்கள் வெண்ணிலா கபடிக் குழு சூரி போல் ‘நாங்க கலந்துக்கலாமா’ என அந்த ஓட்டலுக்கு படையெடுத்திருக்கிறார்கள்.

இதில் ட்விஸ்ட் என்னவெனில், அவ்வாறு அந்த 10 அடி தோசையை முழுவதும் சாப்பிட முடியாவிட்டால் தோசைக்கான 1500 ரூபாய் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதே நிபந்தனை.

இந்த தோசை சேலஞ்ச் தொடர்பான மீம்ஸ்கள்தான் கடந்த ஓரிரு நாட்களாக சமூக வலைதளங்கள் அதிகமாக வட்டமடித்து வருகிறது.

இந்த சவால் குறித்து பேசியுள்ள டெல்லி ஓட்டல் உரிமையாளர், “இந்த சவாலுக்காக முதலில் 5 அல்லது 6 அடி தவாதான் கிடைத்தது. ஆனால் சவால் பெரிதாக இருக்க வேண்டும் என எண்ணியே 10 அடிக்கு தவா ஒன்றினை புதிதாக ஆர்டர் செய்து வாங்கினோம்.

இந்த 10 அடி தோசையை தயாரிக்க 8 நிமிடங்கள் ஆனது. இதுவரைக்கும் 25 பேர் எங்களின் தோசை சவாலில் பங்கேற்று முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் எவருமே வெற்றிபெறவில்லை.” எனக் கூறியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories