வைரல்

சபரிமலை சென்றதால் தொடரும் வன்முறை.. சமூக ஆர்வலர் பிந்து மீது இந்துத்வா நிர்வாகி தாக்குதல் - பின்னணி என்ன?

சபரிமலைக்கு சென்ற பெண் சமூக ஆர்வலர் பிந்து மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை சென்றதால் தொடரும் வன்முறை.. சமூக ஆர்வலர் பிந்து மீது இந்துத்வா நிர்வாகி தாக்குதல் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சிலர் சபரிமலைக்குச் சென்றனர். அவர்களின் மிக முக்கியமான பெண் தான் பிந்து அம்மினி.

சபரிமலை சென்ற பிறகு பிந்து பலமுறை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் கோழிக்கோடு கொயிலாண்டி பொய்காவிலில், பிந்து ஆட்டோ மோதி கீழே விழுந்தார். வேண்டுமென்றே இடித்து தள்ளிவிட்டு மாயமானதாக பிந்து அப்போது அளித்த புகாரில் கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அவர் பல நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பெண் சமுக ஆர்வலர் பிந்து அம்மினி மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை கோழிக்கோடு வடக்கு கடற்கரை சாலையில் நடந்துள்ளது. ஒருவர் தாக்கியதாக பிந்து அம்மினி கூறினார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.

அந்த பதிவில், “ஒரு வழக்கின் நோக்கத்திற்காக நான் வடக்கு கடற்கரைக்கு கட்சியினருடன் வந்திருந்தேன். அவர்கள் என்னுடன் வந்தவர்கள் என்பதை உணர்ந்த ஆசாமி அவர்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னால் ஓடினார். அதன்பிறகு, நான் தனியாக இருந்தபோது தாக்கப்பட்டேன்” என்கிறார் பிந்து அம்மினி. மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

பிந்து அம்மினி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட முதல் காணொளியில், ஸ்கூட்டரில் ஆள் செல்வதைக் காட்டுகிறது. கருப்பு சட்டையும், வெள்ளை ஷார்ட்ஸும் அணிந்துள்ளார். அடுத்த வீடியோவில், அவர் பிந்து அம்மினியைத் தாக்குவதைக் காணலாம்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை அடித்தல், திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories