வைரல்

காலம் முடியலாம்; நம் காதல் முடியுமா? - இணையுடன் இறுதிவரை பின்தொடர்ந்த மயில் - நெஞ்சை உருக்கும் வீடியோ!

தன்னுடன் வாழ்ந்த மயிலின் மறைவை தாங்கமுடியாத மற்றொரு மயில் இறுதிவரை பின் தொடர்ந்துச் சென்ற நிகழ்வு நெஞ்சை உறையச் செய்திருக்கிறது.

காலம் முடியலாம்; நம் காதல் முடியுமா? - இணையுடன் இறுதிவரை பின்தொடர்ந்த மயில் -  நெஞ்சை உருக்கும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜோடியாக தன்னுடன் வாழ்ந்து வந்த மயிலின் மறைவை தாங்க முடியாத மற்றொரு மயில் ஒன்று அதன் இறுதி நிகழ்வு வரை உடன் பயணித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானின் குச்சேரா பகுதியில்தான் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான பிரவீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், நான்கு ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து வந்த மயிலின் இறப்பை தாங்கிக்கொள்ளாத மற்றொரு மயில் பின் தொடர்ந்து செல்கிறது. மேலும் உயிரிழந்த மயிலின் இறுதிச் சடங்குகளில் அந்த மயில் பங்கேற்றிருக்கிறது. கிராம மக்கள் மறைந்த மயிலுக்கு இறுதி மரியாதையைச் செய்திருக்கிரார்கள்.

இந்த வீடியோதான் இணையவாசிகளின் இதயத்தை நனைய வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 77 ஆயிரம் பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories