வைரல்

’டெஸ்லாவின் முதல் ஊழியரே தமிழர்தான்’ - உண்மையை போட்டுடைத்த எலான் மஸ்க்; யார் அந்த தமிழர்?

ஆட்டோ பைலட் குழுவுக்கு முதன் முதலில் ஊழியராக தமிழரையே டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தேர்வு செய்துள்ளதாக அவரே கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’டெஸ்லாவின் முதல் ஊழியரே தமிழர்தான்’ - உண்மையை போட்டுடைத்த எலான் மஸ்க்; யார் அந்த தமிழர்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகின் பெரும் பணக்காரர்களில் முதலானவராக இருக்கக் கூடிய எலான் மஸ்க். இவரது டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழு குறித்து அண்மையில் நடந்த நேர்காணலில் எலான் மஸ்கே கூறியுள்ளார்.

அப்போது டெஸ்லாவின் ஆட்டோ பைலட் குழுவின் முதல் ஊழியராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுச்சாமி என்ற பொறியாளரே தேர்வு செய்யப்பட்டார் எனக் கூறியுள்ளார். மேலும் டெஸ்லாவின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவரே அசோக்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேரிய அவர், ஆட்டோ பைலட் குழு மிகவும் திறமைவாய்ந்தது. உலகின் சில புத்திசாலிகள் இங்கு உள்ளனர் என பெருமிதம் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.

யார் இந்த அசோக் எல்லுச்சாமி?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்ற அசோக் எல்லுச்சாமி, Carnegie Mellon Universityல் ரோபோடிக்ஸ் குறித்த முதுகலை பட்டம் படித்தவராவார்.

டெஸ்லா நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு Volkswagen நிறுவனத்திலும், WABCO என்ற நிறுவனத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

டெஸ்லாவுக்கான ஊழியர்களை எலான் மஸ்க் எளிமையாக ட்விட்டர் மூலமே தேர்வு செய்திருந்தார். அதன் மூலமே அசோக் எல்லுச்சாமி முதல் ஆளாக ஆட்டோ பைலட் குழுவில் இணைந்திருக்கிறார். தற்போது அக்குழுவின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பணியாற்றி வருவது தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories