வைரல்

Viral Video : பாம்பை பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிய வாலிபர்; கொதிப்படைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள்!

இறந்து போன பாம்பை வைத்து வாலிபர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடி வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : பாம்பை பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிய வாலிபர்; கொதிப்படைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வன விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து சேட்டை செய்வதும் அட்டாகசம் செய்வதும் நடப்பது வழக்கமாக இருக்கும் அதே வேளையில் மக்களும் வன விலங்குகளை அவ்வப்போது கொடூரமாக தாக்குவதும், அதனை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளும் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வருகிறது.

அந்த வகையில், சுமார் 6 அடி நீளமுள்ள இறந்த பாம்பை இளைஞர் ஒருவர் தனது இரு கையால் பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதனைக் கண்ட விலங்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என பலரும் இளைஞரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் வாயில்லா ஜீவனை வைத்து விளையாடியதற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கொதித்துப்போய் பேசி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories