வைரல்

வாய்ஸ் மெசெஜ் அனுப்பும் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த WhatsApp நிறுவனம் : வெளியானது புதிய அப்டேட்!

வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசெஜ் அனுப்பும் பயனர்களுக்காக புதிய வசதியை கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம்.

வாய்ஸ் மெசெஜ் அனுப்பும் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த WhatsApp நிறுவனம் : வெளியானது புதிய அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக இருப்பது வாட்ஸ்அப்.

அவ்வப்போது பயனர்களின் தேவைக்கு ஏற்ப பற்பல அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொடுப்பது வாடிக்கை. அவ்வகையில் வாட்ஸ்அப்பில் ஒலி அமைப்பில் செய்தி அனுப்பும் வாய்ஸ் மெசேஜிங்கில் புதிய அப்டேட் ஒன்றினை கொடுத்துள்ளது.

அதன்படி வாய்ஸ் மெசெஜுக்காக பதிவு செய்யப்பட்டதை சரிபார்க்கும் preview வசதியை கொண்டு வந்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இதன் மூலம் தவறான செய்திகள் அனுப்பப்படுவதை தவிர்க்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய வசதி iOS, Android, Whats app web என அனைத்து தளங்களிலும் இயங்கும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக வாய்ஸ் மெசெஜ் சாட்களை 1.5x அல்லது 2x வேகத்திலும் கேட்கும் வசதி ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories