வைரல்

“இதுதான் கடைசி ஆசை..” : 77 வயதில் பனிச்சறுக்கு விளையாடி அசத்திய புற்றுநோய் பாதித்த முதியவர்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பனிச்சறுக்கு விளையாடி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“இதுதான் கடைசி ஆசை..” : 77 வயதில் பனிச்சறுக்கு விளையாடி அசத்திய புற்றுநோய் பாதித்த முதியவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் புற்றுநோயால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

ஒரு சிலர் மட்டுமே இப்படி ஒரு நோய் இருப்பதையே மறந்து தங்களின் இறுதிநாள் வரை மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிகளைத்தேடி அதில் பயணம் செய்கின்றனர். அந்தவகையில், அமெரிக்காவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பனிச்சறுக்கு கற்றுக் கொண்டு விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்குச் சிறு வயதிலிருந்து பனிச்சறுக்கு விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் இந்த ஆசையை இவரால் நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் தனது கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இதற்காகப் பனிச்சறுக்கு கற்றுக் கொண்டு, வாஷிங்டன் பகுதியில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கில் தனது ஆசிரியருடன் இளைஞரைப்போல் பனிச்சறுக்கு விளையாடி அசத்தியுள்ளார்.

முதியவரின் இந்த மகிழ்ச்சியான நிமிடத்தை அவரது மகள் வீடியோ எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் முதியவரின் இந்த உற்சாகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் துவண்டு கிடப்பவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories