வைரல்

நெருப்பைக் கக்கும் டிராகன் மனிதர்... குங்ஃபு கலைஞரின் தந்திர வித்தையால் திகைத்த மக்கள்! #Viral

குங் ஃபூ மாஸ்டர் ஒருவர் தனது விசித்திரமான செய்கையால் வழிப்போக்கர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நெருப்பைக் கக்கும் டிராகன் மனிதர்... குங்ஃபு கலைஞரின் தந்திர வித்தையால் திகைத்த மக்கள்! #Viral
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தெருக்கலைஞரும், தொழில்முறை குங் ஃபூ மாஸ்டருமான லியு ஃபே, தனது விசித்திரமான செய்கையால் வழிப்போக்கர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

55 வயதான லியூ ஃபே, தொழில்முறை குங்ஃபூ மாஸ்டர். இவர் தெருக்களில் குங்ஃபூவுடன் சில மேஜிக்குகளையும் செய்து மக்களை ஈர்த்து வருகிறார். சீனாவின் பிரபலமான தற்காப்புக் கலையான குங்ஃபூவில் பல ஆண்டுகளாகப் பயிற்சி செய்து வருகிறார் லியூ ஃபே.

இவர் தெருவில் செய்த ஒரு நிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மரத்தூளை தனது வாயில் அடைத்து அதில் துளையிடுகிறார். அவர் மூச்சை உள்ளிழுத்தும், வெளிவிட்டும் ஏதேதோ குங்ஃபூ பயிற்சிகள் செய்ய, சிறிது நேரத்தில் உள்ளே நெருப்பு பற்றி அந்தத் துளை வழியாக புகை வெளியேறுகிறது.

லியூவின் வாயில் இருந்து வரும் அதிசய நெருப்பைப் பயன்படுத்தி ஒரு நபர் ஒரு சிகரெட்டை எரியச் செய்தும் காட்டுகிறார். இந்த நிகழ்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மரத்தூளில் உள்ள பாஸ்பரஸை எரியவைப்பதாக 'டிராகன் மனிதர்’ லியூ கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

லியூ மரத்தூளை வாயில் வைக்கும்போதே சில பொருட்களுடன் இணைந்து நெருப்பை உருவாக்கும் சில வேதிப்பொருட்களைச் செருகியிருக்கலாம் என்பது உள்ளிட்ட காரணங்கள் கூறி பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories