வைரல்

”பிச்சை எடுக்கனும், ஞாயிற்றுக்கிழமைகளில் லீவ் கொடுங்க” - வைரலாகும் ம.பி. பொறியாளரின் கடிதம்!

பிச்சை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மத்திய பிரதேச பொறியாளர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

”பிச்சை எடுக்கனும், ஞாயிற்றுக்கிழமைகளில் லீவ் கொடுங்க” - வைரலாகும் ம.பி. பொறியாளரின் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மத்திய பிரதேச பொறியாளர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா மாவட்டத்தில் பணியாற்றி வருபவர் ராஜ்குமார் யாதவ் என்ற பொறியாளர். விநோதமான காரணத்தை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், எனது முன் ஜென்மம் குறித்த நினைவுகள் வந்திருக்கிறது. மகாபாரத கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் ஒருவனாக இருந்திருக்கிறேன். என்னுடைய நண்பன் நகுலனாக ஐதராபாத் எம்.பி. ஓவைசியும், சகுனியாக rss தலைவர் மோகன் பகவத்தும் இருந்திருக்கிறார்கள்.

ஆகவே மேற்கொண்டு எனது ஆன்மிகம் குறித்து தேடவும், என்னுடைய ஈகோவை அழிப்பதற்காக பிச்சை எடுக்கவும் விரும்புகிறேன். ஆகையால் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பு அளித்து அனுமதியுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories