வைரல்

நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்.. செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை!

மாயார் சாலையில் ஆபத்தை உணராமல் யானை அருகே புகைப்படம் எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்.. செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் கேரளா, கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த யானைக் கூட்டங்கள் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் முகாமிட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் ரசிக்க வாகன சவாரி சென்றபோது, சாலை ஓரத்தில் யானைக் கூட்டம் ஒன்று நின்று கொண்டிருப்பதை சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் வாகனத்தை யானை அருகே சென்று நிறுத்தி புகைப்படம் எடுக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த யானை கூட்டத்தில் இருந்த ஆண் யானை ஒன்று வாகனத்தை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆபத்தை உணர்ந்த வாகன ஓட்டி உடனடியாக வாகனத்தை இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories