வைரல்

குலாப் ஜாமுன் கிண்ணத்தில் கரப்பான் பூச்சி... ரூ.55,000 இழப்பீடு வழங்க ஹோட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவு!

குலோப் ஜாமுனில் கரப்பான்பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு ஹோட்டல் நிர்வாகத்துக்கு மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குலாப் ஜாமுன் கிண்ணத்தில் கரப்பான் பூச்சி... ரூ.55,000 இழப்பீடு வழங்க ஹோட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட குலோப் ஜாமுனில் கரப்பான்பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு ஹோட்டல் நிர்வாகத்துக்கு மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜண்ணா. இவர் கடந்த 2016aஅம் ஆண்டு பெங்களூருவின் காந்திநகரில் உள்ள காமத் ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட நண்பருடன் சென்றுள்ளார்.

இரண்டு தோசை மற்றும் குலோப் ஜாமுன் ஆர்டர் செய்த அவருக்கு ஹோட்டல் ஊழியர் வழங்கியகுலாப் ஜாமுன் கிண்ணத்தில் கரப்பான்பூச்சி செத்துக் கிடந்துள்ளது.

அதை ராஜண்ணா தனது மொபைலில் படம் எடுக்க முயன்றபோது, சர்வர் மொபைல் போனை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜண்ணா இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தில் புகாரளித்தார்.

மேலும், இதுதொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்திலும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், பாதிக்கப்பட்ட ராஜண்ணாவுக்கு ரூ. 55 ஆயிரம் இழப்பீடு அளிக்கும்படி ஹோட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ஹோட்டல் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அதில் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், மாவட்ட ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories