வைரல்

"இந்த நிறுவனங்களின் பொருட்கள் இனி ஆன்லைனில் கிடைக்காது" : அதிரடி நடவடிக்கை எடுத்த அமேசான்!

Review கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கொடுத்த 600 சீன நிறுவனங்களை தடை செய்துள்ளது அமேசான் நிறுவனம்.

"இந்த நிறுவனங்களின் பொருட்கள் இனி ஆன்லைனில் கிடைக்காது" : அதிரடி நடவடிக்கை எடுத்த அமேசான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் எப்போதும், அந்த பொருளை ஏற்கெனவே வாங்கி உபயோகித்தவர்களின் அனுபவ பகிர்வை வைத்தே முடிவெடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் அப்படி கொடுக்கப்படும் ரிவ்யூக்களே போலியாக இருந்தால் என்ன செய்வது? அவ்வாறு ரிவ்யூ விதிகளை மீறியதாகவே 600 சீன பிராண்டுகளுக்கு முன்னணி இ-காம்ர்ஸ் நிறுவனமான அமேசான் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சவுத் சீனா மார்னிங் போஸ்ட், மறு ஆய்வு கொள்கைகளை வேண்டுமென்றே மீறியதன் காரணமாக 600 சீன நிறுவனங்கள் மீது அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பே இந்த தடை நடவடிக்கை தொடங்கியிருக்கிறது.

"இந்த நிறுவனங்களின் பொருட்கள் இனி ஆன்லைனில் கிடைக்காது" : அதிரடி நடவடிக்கை எடுத்த அமேசான்!

அப்போது, Aukey, Mpow என்ற இரு Brand-களுக்கு அமேசான் தடை விதித்திருந்தது. ஏனெனில் Review கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்கியது கண்டறியப்பட்டிருக்கிறது. இதை மாதிரி மேலும் சில சீன நிறுவனங்கள் விதிகளை மீறியிருக்கிறது.

இதனையடுத்து, சர்வதேச அளவில் ரிவ்யூ மீறல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் சீனாவைச் சேர்ந்த 600 நிறுவனக்கள் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. அதன் காரணமாகவே இந்த அதிரடியாக தடை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள அமேசான் துணைத் தலைவர் சின்டி டாய், இந்த தடை நடவடிக்கை ஏதும் தனிப்பட்ட தாக்குதல் அல்ல; எங்களின் கொள்கைகளை மீறும் எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி இந்த நடவடிக்கை தொடரும்.

அதேவேளையில் நேர்மையாக செயல்படும் எந்த நிறுவனங்களுக்கும் வரவேற்பளிக்காமல் இருக்கவும் மாட்டோம். ஆனால் போலியான விமர்சனங்கள் மூலம் தங்களின் பொருட்களை அமேசான் மூலம் விற்க முற்பட்டால் இதுதான் கதி என எச்சரிக்கும் வகையில் கூறியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories