வைரல்

“சிங்கிள் குல திலகம்” : வெறுத்துப்போய் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட மாடல் அழகி!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலான கிரிஸ் கேலரா, தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

“சிங்கிள் குல திலகம்” : வெறுத்துப்போய் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட மாடல் அழகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலான கிரிஸ் கேலரா, ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலிங் அழகி கிரிஸ் கேலரா. 33 வயதான இவர் மாடலிங் துறையில் அந்நாட்டில் பிரபலமாக இருந்து வருகிறார். திருமணம் செய்து செட்டில் ஆக விரும்பிய இவர் ஆண் துணையைத் தேடினார்.

கிரிஸ் கேலரா சிலருடன் டேட்டிங்கிலும் ஈடுபட்டாலும், எந்த நபருடனும் நீண்ட நாட்களுக்கு உறவு நீடிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றனர்.

தனக்கு ஏற்பட்ட தொடர் உறவு முறிவுகளால் விரக்தி அடைந்து இனி தனியாக வாழலாம் எனத் தீர்மானித்துள்ளார். இதனால் தன்னைத் தாவே திருமணம் செய்யும் முடிவை எடுத்துள்ளார்.

கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நடைபெற்றது. அவர் மணப்பெண் போல அலங்காரம் செய்து தன்னைத்தானே திருமணம்செய்து கொண்டார்.

கிரிஸ் கேலராவின் திருமண நிகழ்வில் அவரது நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு முன்னதாக, 2020ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண்ணும், பிரேசிலைச் சேர்ந்த டியோகோ ராபெலோ என்ற இளைஞரும் தம்மைத் தாமே திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories