வைரல்

“யார் இந்த முப்பாத்தா?” - நிகழ்ச்சி தொகுப்பாளினி to வைரல் பொண்ணு!

முப்பாத்தாவாக அசத்திய சஷ்டிகா கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.

“யார் இந்த முப்பாத்தா?” - நிகழ்ச்சி தொகுப்பாளினி to வைரல் பொண்ணு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”I don't know who you are?

முப்பாத்தா

where you are?

தேரடித்தெருவு பாப்பநாயக்கம்பாளையம் கோயம்புத்தூரு.

I am coming for you

இந்த பாருங்கோ எங்க ஆத்தாலலாம் வம்புக்கு இழுக்காதிங்கோ”

சமீப சில நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த ஒரு பெயர் ‘முப்பாத்தா’. முப்பாத்தாவாக தனது சொந்தக் குரலில் பேசி அசத்தலான 'Reels' வெளியிட்ட சஷ்டிகாவுக்கு எக்கசக்க ரசிகர்கள். இவரது இந்த வீடியோ இணையத்தில் பட்டையைக் கிளப்பியது. யார் இவர்? என்ன செய்கிறார்? எனத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் பட்டாளம் இணையத்தின் கதவைத் தட்டியது.

முப்பாத்தாவாக அசத்திய சஷ்டிகா கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வீடியோ, புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். சினிமா நடிகை கோவை சரளாவின் தீவிர ரசிகை.

சஷ்டிகா பிரபல தனியார் தொலைக்காட்சியில தொகுப்பாளினியாகப் பணியாற்றியிருக்கிறார். சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார் இந்த முப்பாத்தா.

நண்பரின் திருமண விழாவிற்குச் சென்றபோது யதார்த்தமாக எடுத்த வீடியோதான் இந்த முப்பாத்தாவை டிரெண்டாக வைத்திருக்கிறது. சமூக வலைதளங்களில் இவரது இந்த வீடியோவிற்கு லைக்குகளையும், ஹார்ட்டின்களையும் அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கின்றனர் நம் ஊர் மக்கள்.

“யார் இந்த முப்பாத்தா?” - நிகழ்ச்சி தொகுப்பாளினி to வைரல் பொண்ணு!

யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது சஷ்டிகா, “நான் படத்துல நடிச்சத பத்தி கூட இந்த அளவுக்கு யாரும் பேசல. ஆனால் எதிர்பார்க்காம பண்ண 15 செகண்ட் வீடியோ இவ்வளவு டிரெண்டாகும்னு நினைச்சிக் கூட பார்க்கல” என ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

மேலும், சினிமாவில் கதாநாயகியாகவும், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றுவதே தனது உச்சபட்ச ஆசை என்றும் சொல்லியிருக்கிறார்.

- நிதர்சன் உதயா

banner

Related Stories

Related Stories