வைரல்

மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்- டீசர் வீடியோ !

இந்த ஸ்மார்ட்போனின் லான்ச்சுக்காக ஒரு சிறிய உபதளத்தை பிளிப்கார்ட் உருவாக்கியுள்ளது

மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்- டீசர் வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மோட்டோ போன் வரும் ஆக்ஸ்ட் 27-ம் தேதியிலிருந்து பிலிப்கார்ட் இணையதளம் மூலம் கிடைக்கப்பெரும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனின் ஒரு சிறிய டீசரை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அந்த போன் குறித்து சில விஷயங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதனால் அந்த போனில் என்ன வசதிகள் உள்ளன, தோற்றம் எப்படி உள்ளது போன்ற எந்த விஷயமும் இதுவரை வெளிவரவில்லை.

அந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கும்போது மோட்டோரோலா போனில் யுஎஸ்பி போர்ட் டைப் சி வகை இருப்பதும், கிரில் வகை ஸ்பீக்கர் அடியில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் லான்ச்சுக்காக ஒரு சிறிய உபதளத்தை பிளிப்கார்ட் உருவாக்கியுள்ளது.

அதில் இந்த போனில் பெரிய பேட்டரி, டிஸ்பிளே, மல்டிபிள் பின்பக்க கேமராக்கள் மற்றும் குவால்கம் ஸ்னாப்டிராகன் பிராஸசர் உள்ளிட்டவை இடம்பெற்றிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

சமீபத்தில் மோட்டோரோலா சில புதிய போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா ஒன் புயூஷன் பிளஸ், ஒன் புயூஷன், மோட்டோ ஜி5 பிளஸ் உள்ளிட்ட போன்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மோட்டோரோலா ஒன் புயூஷன் பிளஸ் மட்டும் இந்தியாவில் கிடைக்கிறது. அதே நேரத்தில் மோட்டோ இ7 மற்றும் மோட்டோ இ7 பிளஸ் உள்ளிட்ட போன்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories