வைரல்

பிரிட்டனில் கரை ஒதுங்கிய 15 அடி நீள விநோத உயிரினம்: குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

இந்த உயிரினத்தின் சடலத்தைக் கண்டவர் அதற்கு கால்களை போன்ற நான்கு பாகங்களும், நீட்டிக்கொண்டிருக்கும் எலும்புகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கரை ஒதுங்கிய 15 அடி நீள விநோத உயிரினம்: குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு புதுவிதமான உயிரினம் பிரிட்டன் நாட்டின் ஒரு ஐன்ஸ்டேல் கிராமத்துக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. துர்நாற்றம் வீசும் அதனுடைய சடலத்தை அக்கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜுலை 2-ம் தேதி கண்டுள்ளார்.

இதை கண்ட அந்த நபர் அந்த உயிரினத்துக்கு நான்கு கால்கள் போன்ற பாகங்கள் இருந்தன. அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.” என்று தெரிவித்துள்ளார். மேலும் “15 அடி நீளம் கொண்ட அந்த உயிரினத்தின் பல இடங்களில் எலும்புகள் நீட்டிக்கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ நான்கு அடிகள் நீளம் இருந்தன” என தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த பிராணியின் உடலில் சம்பந்தமில்லாத ஒன்று சேர்ந்திருந்ததாகவும், இதனால் அது பிரசிவிக்கும்போது உயிரிழந்திருக்கலாம் எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்த உயிரினத்தின் புகைப்படங்களை ஐன்ஸ்டேல் ஃபேஸ்புக் குழுவின் பதியப்பட்டவுடன் வைரலாகியுள்ளன. அதை பகிர்ந்துள்ள பலர் இது திமிங்கிலமாக இருக்கக் கூடும் என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

ஒருவர் இது ‘வுல்லி’ என்ற வகையான திமிங்கிலமாக இருக்கலாம். ஆனால் அவை அழிந்துவிட்டன என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர் ஒரு பசுவை உண்ட திமிங்கிலம் என்று பகடி செய்துள்ளார். மற்றொருவர் இது குதிரையா, காளையா அல்லது பசுவா? என்று குழம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது என்ன வகையான உயிரினம் என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும், ஆனால் இது ஏதேனும் திமிங்கில வகையைச் சார்ந்ததாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories