வைரல்

“திருடிய பொருளை திருப்பிக் கொடுத்த பைக் திருடர்கள்.. கண் கலங்கிய டெலிவரி பாய்” பாக்.,ல் நெகிழ்ச்சி! Video

பாகிஸ்தானில் டெலிவரி செய்யும் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருடர்கள் அவரிடமே திருப்பி கொடுத்த சம்பவத்தை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸால் பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 1.54 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலியானோர் எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று வரையில் 2,975 பேர் உயிரிழந்தும், 58 ஆயிரத்து 437 பேர் அந்நாட்டில் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்காக மக்கள் நடமாட்டத்தை குறைத்த பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கராச்சி பகுதியில் ஊரடங்கு நேரத்திலும் அங்கும் இங்குமாக குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழிப்பறி திருடர்கள் இருவர் பிக்பாக்கெட் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென மனமாறிய அந்த கொள்ளைக்கார இளைஞர்கள் டெலிவரி செய்பவரிடம் இருந்து திருடிய பர்ஸை அவரிடமே திருப்பி கொடுத்திருக்கிறார்கள். மேலும், அந்த டெலிவரி ஊழியரை கட்டியணைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. இதையறிந்த கராச்சி போலிஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

வேலையிண்மை காரணமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டவர்கள், உணவு டெலிவரி செய்பவரிடம் இருந்து திருடியதால் குற்றவுணர்ச்சியில் மீண்டும் அவரிடமே அதனை ஒப்படைத்திருப்பது நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories