வைரல்

“தாய்க்கு கொரோனா.. குழந்தைக்கு பால் பவுடர் அலர்ஜி; ஆனால்...” - பேரிடர் காலத்தில் நெகிழச் செய்த மனிதநேயம்!

பேரிடர் காலத்தில் இதுபோன்ற மனிதநேயமிக்க செயல்கள் நம்பிக்கை அளித்து வருகின்றன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஹாங்காங்கில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட இளம் தாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்தப் பெண்ணின் 4 மாத குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அக்குழந்தைக்கு பால் பவுடர் அலர்ஜி என்பதால் அதற்கும் வழியின்றிப் போயுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட தாய், குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தாலும், பாதுகாப்பு வழிமுறைகளையும் பரிந்துரைக்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தாய்மார்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், தனி வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகள் குடும்பத்தினரைப் பார்க்க அனுமதி இல்லை என்பதால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதைக் கவனித்துக் கொள்வதும் சிரமம்.

“தாய்க்கு கொரோனா.. குழந்தைக்கு பால் பவுடர் அலர்ஜி; ஆனால்...” - பேரிடர் காலத்தில் நெகிழச் செய்த மனிதநேயம்!

இதனையடுத்து அந்த ஊரில் இருக்கும் தாய்ப்பால் தானம் வழங்கும் தன்னார்வலர்களை தொடர்பு கொண்டுள்ளார் அந்தப் பெண்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், அடுத்த சில மணி நேரங்களில் அந்தக் குழந்தைக்கு பல்வேறு தாய்மார்களின் மூலமாக 15 லிட்டர் தாய்ப்பால் தானமாகக் கிடைத்துள்ளது.

இதையறிந்த அந்தத் தாய் நெகிழ்ந்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், “என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. பல தாய்மார்கள் என் குழந்தைக்காக தாய்ப்பால் தானம் கொடுத்துள்ளதை நம்ப முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

இந்தச் செய்தி பலரையும் நெகிழச் செய்துள்ளது. பேரிடர் காலத்தில் இதுபோன்ற மனிதநேயமிக்க செயல்கள் நம்பிக்கை அளித்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories