வைரல்

‘ஆமைக்கு ஆப்பிள் ஊட்டும் குரங்கு’ - அன்பை போதிக்கும் வைரல் வீடியோ!

சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு காணொளி காட்சி அன்பை போதிக்கிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

சமூக வலைத்தளங்களில் பரவும் அதிசயமான காணொளிக் காட்சிகள் சில நம்மை நெகிழ வைத்து நம் கண்களை அகல விரிக்க வைக்கின்றன.

சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு காணொளி காட்சி அன்பை போதிக்கிறது. ஒரு சிம்பன்சி குரங்கு, ஆமை ஒன்றிற்கு ஆப்பிள் ஊட்டும் ஆச்சர்ய காணொளி இணையத்தில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா இப்படியொரு அதிசய காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளியில் சிம்பன்சி ஒரு ஆப்பிள் சாப்பிடுவதைக் காணலாம். அது ஆப்பிளை கடித்த பிறகு, அருகிலுள்ள ஒரு ஆமைக்கு வழங்குகிறது.

"பகிர்வதன் மூலம் மட்டுமே அன்பு வளரும்" என்ற தலைப்பில் இந்த காணொளியை சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அன்பை ஆப்பிளாகப் பகிரும் இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories