வைரல்

கதறி அழும் புதுமணப்பெண்... அலேக்காக தூக்கிச்சென்ற மணமகன்... காரணம் இதுதானா? - வைரல் வீடியோ!

சோகத்தில் கதறி அழுதபடி இருந்த புது மணப்பெண்ணை மணமகன் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கதறி அழும் புதுமணப்பெண்... அலேக்காக தூக்கிச்சென்ற மணமகன்... காரணம் இதுதானா? - வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண்கள் எவ்வளவுதான் வீரதீரச் செயல்களில் ஈடுபட்டாலும் கூட திருமணமாகி கணவர் வீட்டுக்குச் செல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் மனச்சிதைவை எந்த ஆறுதல் சொல்லியும் தீர்த்துவிட முடியாது.

பல ஆண்டுகள் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த பெண் திடீரென பழக்கமில்லாதவர்களின் வீட்டுக்கு செல்லும் போது அங்குள்ளவர்களுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதிலும் பெரும் தயக்கம் காட்டுவர்.

அதைவிட, திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் செல்ல முற்படும்போது நிகழும் சோகங்கள் தனி அத்தியாயம். பெரும்பாலும் இதுபோன்ற சோக நிகழ்வுகளை சினிமாக்களிலேயே நிறைய பார்த்திருக்கிறோம். நிஜ வாழ்விலும் நடந்த இதுபோன்ற சம்பவம் வீடியோவாகப் பதிவாகியுள்ளது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது பெற்றோர் முன்பு அழுதுகொண்டிருந்த மணமகள் வெகு நேரமாகியும் அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இதனால் பொறுமையிழந்த மணமகன் சடாரென மணமகளை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார். அப்போதும் அந்தப் பெண் தன் அழுகையை நிறுத்தாமல் கதறிக் கொண்டே இருந்தார். இது தொடர்பான வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories