வைரல்

சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும் சுமன முத்திரை - நலம் நலம் அறிக | வீடியோ!

நீரிழிவு நோயில் இருந்து காத்துக்கொள்ள உதவும் முத்திரை குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் கல்பனா தேவி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகில் நோய்களை குணப்படுத்துவதைக் காட்டிலும், மருத்துவத்தை பெரும் வணிகமாகவே மாற்றியிருக்கும் நிகழ்வுகள் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. அந்த வரிசையில் நீரிழிவு எனும் சர்க்கரை நோய் அதிகமானோரை பாடாய்ப்படுத்தி வருகிறது.

இந்திய அளவில் சுமார் 1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை 10 கோடியாகக் கூட அதிகரிக்கக் கூடும் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும் சுமன முத்திரை - நலம் நலம் அறிக | வீடியோ!

டையாபடீஸ் அதிகரிப்பதற்கு வாழ்வு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உணவு முறை, உடல் உழைப்பு இல்லாமல் போவதும் இதில் அடங்கும்.

சர்க்கரை நோயால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீரிழிவு நோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் இங்குதான் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

வாழ்வியல் முறையை ஒழுங்குபடுத்துவதே இவற்றுக்கெல்லாம் சிறந்த நிவாரணியாக இருக்கும் என சித்த மருத்துவர் கல்பனா தேவி கூறுகிறார். மேலும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், வந்தால் அதிலிருந்து காத்துக்கொள்வதற்குமான முத்திரையை பரிந்துரைக்கிறார்.

அது ‘சுமன முத்திரை’. இந்த முத்திரையை காலை மாலை என இரு வேளைகளிலும் தலா 20 நிமிடங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நன்மை பயக்கும் எனத் தெரிவிக்கிறார். இதை பதின்ம வயதில் உள்ள குழந்தைகளும் பின்பற்றலாம்.

வாழ்வியல் முறையை மாற்றமுடியாத சூழலில் இருந்தால் உடலையும், மனதையும் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு இந்த சுமன முத்திரை உதவுகிறது. இதனால் உடல் வெப்பம் குறையும். விந்தணுக்கள் விரயமாவது தடுக்கப்படும்.

banner

Related Stories

Related Stories