வைரல்

ஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை; வேன் ஓட்டுநரால் உயிர் தப்பிய அபூர்வம் (வைரல் வீடியோ)

சாலை வளைவில் திரும்பியபோது குழந்தை ஒன்று காரில் இருந்து விழும் காட்சி வைரலாகி வருகிறது.

ஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை; வேன் ஓட்டுநரால் உயிர் தப்பிய அபூர்வம் (வைரல் வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வு, அபராதம் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது காவல் துறை.

இருப்பினும், அஜாக்கிரதை காரணமாக நாடு முழுவதும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். சில விபத்துகளில் நல்வாய்ப்பாக உயிர் பிழைக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

அவ்வகையில், கேரளாவின் மலப்புரத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி நடந்த விபத்தில் குழந்தை ஒன்று அதிர்ஷ்ட்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.

மலப்புரம் - கொட்டக்கல் செல்லும் சாலையின் வளைவில் வேகமாக திரும்பியபோது, காரின் கதவு திறந்துக்கொண்டதால் அதிலிருந்த குழந்தை திடீரென சாலையில் விழுந்தது. இதனைக் கண்டதும், பின்னால் வந்த வேன் உடனடியாக பிரேக் பிடித்து நின்றதை அடுத்து காரும் நிறுத்தப்பட்டது.

பின்னர், மற்ற வாகனங்களும் அடுத்தத்தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, குழந்தையின் உயிர் தப்பியது. இந்த நிகழ்வுகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

பாதுகாப்புக்கு எந்த குறைவும் இல்லாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், பயணத்தின் போது குழந்தை உள்ளிட்ட எவராக இருந்தாலும் மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த சிசிடிவி காட்சி உணர்த்துகிறது.

banner

Related Stories

Related Stories