வைரல்

Devil Lips : சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகும் நூதன சேலஞ்ச் - எச்சரிக்கும் தோல் நிபுணர்கள்!

'Devil Lips' ட்ரெண்டிங்கில் பங்கேற்பதென்றால் இதை முதலில் செய்யுங்கள் என அமெரிக்க தோல் நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.

Devil Lips : சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகும் நூதன சேலஞ்ச் - எச்சரிக்கும் தோல் நிபுணர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், கரப்பான் பூச்சி சேலஞ்ச், 10 ஆண்டுகள் சேலஞ்ச் என சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் விநோதமான நிகழ்வுகள் ட்ரெண்டாவது வழக்கம். அந்த ட்ரெண்ட் உலகம் முழுவதும் பரவும்.

இது போன்ற சவால்கள் நிறைந்த ட்ரெண்ட் சில நேரங்களில் பல்வேறு விபரீதங்களையும் ஏற்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில் ‘Devil Lips’ எனும் ட்ரெண்ட் ஒன்று ரஷ்யாவில் இருந்து தொடங்கியிருக்கிறது.

விதவிதமாக பெண்கள் அலங்காரம் செய்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், அது சிலருக்குப் பொருந்தும்; சிலருக்குப் பொருந்தாமல் கொடூரமாக அமைந்துவிடும்.

அதில், உதடுகளை அலைகள் போல உருவாக்குவதற்காக பிசாசு உதடுகள் என கூறப்படும் Devil Lips ஒப்பனையை நடிகர் நடிகைகள் முதல் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

காஸ்மோ சர்ஜரி மூலம் உதடுகளை அலைகள் போல மாற்றியமைத்து கொள்கின்றனர். இதனை ஆண்களும், பெண்களுமே விரும்பி செய்துகொள்கின்றனர்.

முதலில் இதனைக் காண்பவர்களுக்கு ஃபோட்டோஷாப் அல்லது ஸ்மார்ட் ஃபோன்களில் Filter உபயோகித்ததைப் போன்று தோன்றினாலும் இயற்கையாக உள்ள உதடுகளை இவ்வாறு அலைகள் போன்று மாற்றியமைத்துள்ளனர்.

இந்த பிசாசு உதடுகளை செய்துகொண்ட ரஷ்யாவைச் சேர்ந்த நடிகை அலிஸா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதற்கு கமென்ட் செய்துள்ள பலர், இது ட்ரெண்டாகவே இருந்தாலும் இயற்கைக்கு எதிரானது எனவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பேசியுள்ள நியூயார்க்கை சேர்ந்த தோல் நிபுணர் ஒருவர், இதனை விளம்பரத்துக்காகவும், வேடிக்கைக்காகவும் செய்துகொண்டாலும் hyaluronic எனும் சரியான நிரப்பிகளை உபயோகிக்காவிட்டால் பேராபத்து ஏற்படும் அபாயமும் உண்டு. மேற்குறிப்பிட்ட அமிலம் நிறைந்த நிரப்பியை உபயோகித்தால் மட்டுமே உதடுகளை பழையநிலைக்கு கொண்டு வரமுடியும் என கூறியுள்ளார்.

மேலும், இந்த டெவில் லிப்ஸ் ட்ரெண்டில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்றால் முறையாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் ஃபோட்டோஷாப் செய்து பதிவேற்றிக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories