வைரல்

மலிவு விலையில் வெங்காயம் வாங்க முட்டி மோதிய கூட்டம்! (வைரல் வீடியோ)

ஆந்திராவில் மலிவு விலையில் வெங்காயம் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக வெங்காயத்தின் உற்பத்தியும், வரத்தும் குறைந்ததால் அதன் விலை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தென் மாநிலங்களான தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகியவற்றில் வெங்காயத்தின் விலை தங்கத்தின் விலை போன்று அதிகரித்து வருகிறது. 1 கிலோ பெரிய வெங்காயம் 200 ரூபாய்க்கும், 1 கிலோ சின்ன வெங்காயம் 220 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில், நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, “நாங்கள் வெங்காயம் சாப்பிடுவதில்லை அதனால் அது பற்றிக் கவலை இல்லை” எனப் பேசியிருந்தது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் கிலோ ஒன்றுக்கு 95 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அறிவித்ததை அடுத்து, வெங்காயத்தை வாங்க மக்கள் முண்டியடித்துக்கொண்டு செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories