வைரல்

டைம் ட்ராவல் செய்து வந்துள்ளாரா கிரேட்டா தன்பெர்க்? - வைரலாகும் 120 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்!

சூழலியல் போராளியான கிரேட்டா தன்பெர்க்கை போல் 120 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

டைம் ட்ராவல் செய்து வந்துள்ளாரா கிரேட்டா தன்பெர்க்? - வைரலாகும் 120 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகில் ஒரே போன்று உருவ ஒற்றுமையோடு 7 பேர் இருப்பார்கள் எனும் கூற்று பரவலாக இருக்கிறது. ஆனால் அதனை உறுதியாக்கும் வகையில் ஒரு சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் சரியாக 1898ம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் 2 சிறுவர்களும், 1 சிறுமியும் பணிபுரிவது போன்ற புகைப்படம் கண்டறியப்பட்டுள்ளது.ப்

டைம் ட்ராவல் செய்து வந்துள்ளாரா கிரேட்டா தன்பெர்க்? - வைரலாகும் 120 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்!

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமியின் உருவமும், சூழலியல் போராளியான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க்கின் உருவமும் அச்சு அசலாக ஒன்று போலவே உள்ளது. இந்தப் புகைப்படம் வைரலாகி உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பல நெட்டிசன்கள், இந்த புகைப்படத்தை பார்த்து கிரேட்டா தன்பெர்க் டைம் ட்ராவல் செய்து தற்காலத்திற்கு வந்திருக்கிறார் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

பருவநிலை மாற்றம் குறித்து நடந்த ஐ.நா மாநாட்டில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாக உலகத் தலைவர்களை சாடி ஆவேசமாக கிரேட்டா தன்பெர்க் பேசியிருந்தார். இது சர்வதேச அளவில் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories