வைரல்

மதுபோதையில் சிக்கினால் ஊருக்கே கறி விருந்து - விநோத தண்டனை விதிக்கும் குஜராத் கிராமம்!

குஜராத்திலுள்ள கிராமம் ஒன்று மதுபோதையில் சிக்குவோர் ஊருக்கே கறி விருந்து வைக்க வேண்டும் என வினோத தண்டனை வழங்கி வருகிறது.

மதுபோதையில் சிக்கினால் ஊருக்கே கறி விருந்து - விநோத தண்டனை விதிக்கும் குஜராத் கிராமம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் காதிசிதாரா கிராமத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அவ்வப்போது மோதல், கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனை தடுக்க முடிவு செய்த கிராமத்தினர், மதுபோதையில் ஊருக்குள் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என கடந்த 2013ம் ஆண்டு அறிவித்தனர். அதன்படி மதுபோதையில் வருவோருக்கு 2 ஆயிரம் ரூபாயும், போதையில் தகராறில் ஈடுபட்டால் 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது.

மதுபோதையில் சிக்கினால் ஊருக்கே கறி விருந்து - விநோத தண்டனை விதிக்கும் குஜராத் கிராமம்!

மேலும் மதுபோதையில் சிக்குவோர் 800 பேர் கொண்ட மொத்த கிராமத்துக்கும் ஆட்டுக்கறி விருந்து வைக்க வேண்டும் என்ற விநோத தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், தற்போது கிராமத்தில் யாரும் மது அருந்துவதில்லை என ஊர்ப் பெரியவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories